உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
அரங்க நண்ணி யரிமா
சுமந்த மரகதத்
தியன்ற மணிக்காற்
கட்டில் நூல்வினை
நுனித்த நுண்டொழி
லாளர் வாலரக்
கூட்டிய வானூ னிணவைப் 145 பால்பரந்
தன்ன பஞ்சி
மெல்லணைச் சேக்கை
மெலியச் செம்மாந்
திருந்த முடிகெழு
தந்தை முன்னர்த்
தோன்றி அடிதொழு
திறைஞ்சிய வவரிடை யெல்லாம்
|
|
141 - 148:
அரிமா..........எல்லாம் |
|
(பொழிப்புரை) அவ்வரங்கத்தின்கண் அரிமான்களாற் சுமக்கப் பட்டது
போன்றியற்றப்பட்டதும் மணிகளானியன்ற கால்களை யுடையதும் ஆகிய அரசு
கட்டிலின்மேல் நூற்றற்றொழிலிலே முற்றிய நுண்ணிய
தொழிலாளரானூற்கப்பட்டுப் பின்னர் வெள்ளிய அரக்கூட்டிய வெள்ளிய நூலாற்
பின்னிய பின்னலையுடைய பால் பரவினாற் போன்ற பஞ்சாலியன்ற மென்மையுடைய
அணையாகிய இருக்கை அழுந்தி மெலியும்படி ஏக்கழுத்தந்தோன்ற வீற்றிருந்த
கோமுடி புனைந்த தங்கள் தந்தையாகிய மன்னவன் திருமுன் எய்தி
அவன் திருவடிகளைக் கைகூப்பித் தொழுது வீழ்ந்து வணங்கி நின்ற எல்லா
மகளிருள் வைத்து என்க. |
|
(விளக்கம்) இமிழ்முழா :
வினைத் தொகை. முழா - ஈண்டு நாண் முழவு என்க. அரிமா - சிங்கம்.
நூல்வினை - நூற்குந் தொழில். வாலரக்கு - ஒருவகை யரக்கு, வால் நூல் -
வெண்ணூல். நிணவை - பின்னல். சேக்கை - இருக்கை. செம்மாத்தல் -
ஏக்கழுத்தந் தோன்ற விருத்தல். தந்தை - பிரச்சோதனன். |