உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
          பண்ணமை நல்லியாழ்ப் பலிக்கடன் வகீஇய
          அண்ணல் வருகென வவ்வயி னோடி
    230   ஒண்டொடி மகளிர் கொண்டகம் புகுதரத்
          தானைத் தவிசிற் றகையோ னேற
          ஏனைத் தவிசி னங்கையை யிருத்தினர்
          இன்னா ளென்ப திவனு மறியான
 
        228 - 233: பண்ணமை..........அறியான்
 
(பொழிப்புரை) இனி, பண்ணுறுத்தப்பட்ட நல்லிலக்கணமுடைய யாழிற்குப் பலிகொடுத்து வழிபாடு செய்தற்கு ஆசிரியனாகிய உதயண நம்பி வருவானாக! என்று கூறலாலே ஒள்ளிய தொடியணிந்த ஏவன் மகளிர் உதயணன் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவ்விசை மன்றத்தின் அகத்தே புகுதலாலே ஆங்குத் துகில் விரிக்கப்பட்ட இருக்கையின்கண் பெருந்தகைமையுடைய அவ்வுதயண நம்பி ஏறி வீற்றிருப்ப வாசவதத்தையின் பொருட்டிடப் பட்ட மற்றோர் இருக்கையின்கண் அவளை இருத்தினர். இடையே திரை வீழ்த்தப்பட்டிருத்தலானே யாழ்கற்பாள் யார் என்று உதயணணும் அறிந்திலேன்.......என்க.
 
(விளக்கம்) பண் - இசையுமாம். பலிக்கடன் - பண்புத்தொகை. யாழ் வாசிக்கத்தொடங்குங்கால் யாழ்க்கு மலர் பலி முதலியன கொடுத்து வணங்குதல் மரபு. இதனை,
'நல்லிசைப் மடந்தை நல்லெழில் காட்டி
அல்லியம் பங்கயத் தயனினிது படைத்த
தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த்
திருகையின் வாங்கி இடவயின் இரீஇ
மருவிய வினய மாட்டுதல் கடனே'
எனவரும் செய்யுளானறிக. (சிலப் - 8: 23: உரை அடியார்க்கு நல்லார் மேற்கோள்) வகீஇய - வகுத்தற்கு. அண்ணல் - உதயணன். அவ்வயின் - அவனிருக்குமிடத்தே. தானை - துகில். தகையோன் - உதயணன் நங்கை - வாசவதத்தை. இடையே திரைவீழ்த்தப்பட்டுள்ளமையின் இவனும் அறியான் என்றவாறு. வாசவதத்தை யாழ் பயிலத் தொடங்குதல