உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
நன்னர்க் கிளவி நயவாப் பயிற்றி 235 ஆசான்
கொடுக்கு மரும்பெறல்
விச்சை காண்போர்
செய்யுங் கடப்பா
டிதுவென வெள்வளை
முன்கை தோழியர்
பற்றி ஒள்ளிழை
மாத ரொழுக்கஞ்
செய்கெனக் காந்த
ளழித்த கைம்முகிழ் கூப்பிக் 240
கஞ்சிகை திறந்த பொழுதி னன்
|
|
234 - 240:
நன்னர்.........திறந்தபொழுதின்
|
|
(பொழிப்புரை) அங்ஙனமிருந்தபொழுது தோழியர் ஒள்ளிய அணிகலன்களையுடைய மாதராய்! நன்மையுடைய இனிய மொழிகளைக் கேட்கும் மாணவர்க்கு விருப்பம் உண்டாகும்படி கற்பித்து நல்லாசிரியன் வழங்கும் பெறற்கரிய கலையைப் பயிலும் நன்மாணாக்கர் தொடக்கத்தே செய்யும் கடமை இஃதாம் என்றுணர்த்தி அவளுடைய வெள்ளிய வளையல் அணிந்த இருமுன் கைகளையும் எடுத்து ஒரு சேரப்பற்றி நீ நின்னுடைய ஆசானை வணங்கும் கடமையைச் செய்தருள்க! என்று அறிவிக்க, அதுகேட்ட நங்கை காந்தண்மலரின் அழகைக் கெடுத்த தன் கைம்மலரைக் கூப்பத் தோழியர் உருவு திரையைத் திறந்த பொழுதின்கண் என்க.
|
|
(விளக்கம்) நன்னர்க்கிளவி - கேள்வியானும்
பயனானும் இனிய மொழி. நயவர - விருப்பம் உண்டாகும்படி. காண்போர் -
மாணவர். ஒழுக்கம் - சான்றோர் வகுத்த ஒழுக்கமாகிய வழிபாடு என்க. மாதர்
- விளி. கஞ்சிகை - உருவுதிரை. கூப்ப - எனத் திரித்துக்கொள்க.
|