| (விளக்கம்)  வனப்புமுதலா அமைந்து எய்தி வெறுக்கையன்றியும் கொண்டும்   பரிசத்தினையும் 
      பெறுதல் இயற்கை என ஒருசொல் வருவித்துக்கொள்க.   எண்ணி (85) பொன்மாசை 
      ஏந்திக் கம்பலை கழுமச் சென்று என   மாறியியைத்துக் கொள்க.      பரத்தையர்க்கு ஒரு கழஞ்சுப்பொன் முதலாக ஆயிரத்தெட்டுப்   
      பொன்னீறாகப் பரிசப்பொருள் வங்கும் வழக்கத்தை "ஒப்பவொன்றாகியாக   
      ஆயிரத்தெட்டீறாச் செப்பி" எனவும் (சீவக. 107) "நூறு பத்தடுக்கி எட்டுக்கடை 
        நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவது" எனவும், (சிலப் 3: 164 - 5) 
      "  எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்தெண் கழஞ்சு முட்டா வைகன் முறைமையின் 
        வழாஅத் தாக்கணங் கனையார்" எனவும் (சிலப் - 14: 158 - 60) 
        பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க.        வனப்பு 
      முதலாக வழிவர அமைந்து என்றது அழகும் ஆடலும்   பாடலுமாகிய இம்மூன்று நலங்களும் 
      அவர்க்குக் குலப்பண்பாலேயே   கைவருவன என்றவாறு. 'குலவிச்சை கல்லாமற் 
      பாகம்படும்' என்பதும்   நினைக. கோலம் - ஒப்பனை. வனப்பு முதலியன அவர்க்கு 
      இயற்கையாக   மேலும் தத்தம் குலத்து முறைமைக் கேற்பக் கோலமும் 
      செய்துகொண்டு   என்க. இவற்றாலே தம்மை வீழ்ந்தோர் என்க. வெறுக்கை - 
      பொன்.   காணி - நிலம். பரத்தையர்க்குப் பரிசப் பொருள் இவ்வளவு என 
      வரையறை   செய்தல் அரசியல் நூல் வழக்காதலின் 
      ஒன்றுமுதலாக.......ஆயிரங்காறும்   ஆத்தபரிசம் என்றார். ஆத்தல் - 
      வரையறுத்தல்.  |