உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம |
|
கலையுற வகுத்த காமக்
கேள்வித் துறைநெறி
போகிய தோழித்
தூதினர் அரசர்க்
காயினு மடியர்க்
காயினும் அன்றை
வைகல் சென்றோர்ப் பேணிப் 90
பள்ளி மருங்கிற் படிறின்
றொழுகும் செல்வ
மகளிர் சேரி நண்ணி
|
|
(இதுவுமது) 86 -
91: கலை..........நண்ணி
|
|
(பொழிப்புரை) ஆடலும் பாடலும்
முதலிய கலைத்தன்மை பொருந்தும்படி வகுக்கப்பட்ட இன்பத்துறை
நூற்கேள்வியைக் கேட்டு முதிர்ந்தவரும் தோழியராகிய தூதர்களையுடையவரும்
ஆகிய தம்மை விரும்பிவரும் அரசர்க்கேனும் அன்றி அடியவர்க்கேனும் வேற்றுமை
பாராட்டாமல் அன்றன்று தம்பால் வந்தோரை நன்குபசரித்துச் சிறிதும்
வஞ்சமின்றிப் படுக்கையின்கண் இன்புற ஒழுகும் நல்லியல்புடைய
செல்வமிக்க பரத்தையர் வாழுகின்ற சேரியை யடைந்து என்க.
|
|
(விளக்கம்) கலை -
ஆடல் பாடல் முதலியன, காமக்கேள்வி - இன்ப நூற் கேள்வி. தம்பால்
வருவோர் அரசராயினும் அடியராயினும் வேற்றுமை பாராட்டாது
நன்குபசரித்தென்க. படிறு - வஞ்சகம்.
|