உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
வயக்களி றடக்கிய வத்தவர்
பெருமகன் இயக்கரும்
வீதியி னெதிர்ப்பட
வொருநாள் நயப்புற்
றரற்று நருமதை யென்னும் 95 நாடகக்
கணிகை மாடம்
யாதெனத் தாயுறை
வியனகர்த் தன்குறை
யுரைத்து வாயி
லாகிய வயந்தகன் புகலும்
|
|
(இதுவுமது) 92 - 97:
வயக்களிறு..........புகலும்
|
|
(பொழிப்புரை) வலிமைமிக்க
நளகிரி யென்னும் களிற்றியானையை அடக்கியருளிய வத்தவநாட்டு மன்னனாகிய
உதயணகுமரன் உயங்குதற்கரிய வீதியின்கண் ஒருநாள் உலாப்போம் பொழுது ஒரு
பரத்தை மகள் நருமதை என்னும் பெயருடையாள் அவன் எதிரேவர அவளைக்
கண்டதுமுதலாக அம்மன்னன் அவளைப் பெரிதும் விரும்பி அரற்றா நின்றான்.
அந்த நருமதை யென்னும் நாடகக் கணிகையின் மாளிகை யாது? என்று எதிர்
வருவோரை வினவி (அவர் காட்டுதலானே) அவள் தாய் வருகின்ற அகன்ற
மாளிகையை அடைந்து வாயில் காவலர்க்குத் தனது வரவிற்குரிய காரணத்தைக்
கூறி உதயணனுக்குத் தூதாக வந்த அவ்வயந்தகன் அம்மாளிகையின்கட் புகுதலும்
என்க.
|
|
(விளக்கம்) "வயக்களி றடக்கிய
வத்தவர் பெருமகன் இயக்கரும் வீதியில் ஒருநாள் நருமதை எதிர்ப்பட
நயப்புற்று அரற்றும்" என்னுந் துணையும் படைத்து மொழிந்தவாறாம் இதற்குப்
பயன் உதயணன் மெலிவிற்கு நருமதையே காரணம் என ஊரார் அறிதல் ஆகும். வய -
வலி. வயக்களிறு என்றது நளகிரியை. தாய் - நருமதையின் தாய். வியனகர் -
அகன்ற வீடு. வாயில் - தூது.
|