உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
காரணக் கிளவி நீர
கூறித்
தற்பெயர் பெயர்ப்ப மனத்தகை
கரந்து
பிற்பயங் கருதும் பெருநசைக் கிளவி
115 இன்னகைத் தோழற் கினிய
பயிற்றி
ஆங்கினி திருந்த போழ்திற
|
|
(இதுவுமது)
112 - 116:
காரணக்கிளவி..........போழ்தில்
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட
வயந்தகன் தன் மனத்துள்ள உண்மையை மறைத்து இனிய நகையினையுடைய தோழனாகிய
உதயணன் பொருட்டு அவன் நேரில் அவள் மாளிகைக்கு வராமைக்குரிய காரணங்களை
உணர்த்துகின்ற நீர்மையுடையனவும், பின்னர்ப் பெரிய பயனைக் கருதுதற்குக்
காரணமான பெரிய அவாவைத் தூண்டுவனவும் ஆகிய நீர்மையுடைய இனிய
மொழிகளை அக்கிழவிக்குப் பலபடக் கூறித் தன்கைப் பொருளை அவள்பாற்
கொடுக்க அதனை அவள் ஏற்றபின்னர் அம்மாளிகையின்கண் இனிதாக
இருந்தபொழுதில் என்க.
|
|
(விளக்கம்) வயந்தகன் தன்
மனத்தகை கரந்து அவன் வாராமைக்குரிய காரணக்கிளவியும் பிற்பயம் கருதும்
பெருநசைக் கிளவியும் நீர இனிய கூறித் தன் பெயர் பெயர்ப்ப
அவள் ஏற்றவுடன் இனிதினிருந்த போழ்தின் என நுண்ணிதின்
வேண்டுமிடனெல்லாம் காரணக் கிளவி நீர என்பதைக்கூட்டி ஓதுக.
இன்னகைத்தோழன் என்றது, உதயணனை. நீர: பலவறிசொல். காரணக்கிளவி -
காரணத்தை யுணர்த்துஞ்சொல். பெயர் - பொருள். மனத்தகை -
மனத்தினுள்ளதாகிய உண்மை. அக்கிழவி பிற்பயங் கருதக் காரணமான பெரு
நசையை யுண்டாக்குவனவும் கேட்டற்கு இனியனவும் ஆகிய மொழிகளைப் பயிற்றி
என்க.
|