உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
வலிதி னென்னை வத்தவர்
பெருமகன்
கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப்
155 பூசற் கிளவி சேயிழை பயிற்ற
|
|
(நருமதை
அரற்றுதல்) 153 - 155:
வலிதின்..........பயிற்ற
|
|
(பொழிப்புரை) அங்ஙனம் கொண்டுபோகும்
பொழுது சிவந்த அணிகலன்களையுடைய நருமதை வழியின்கண் குழுமிநின்று
காண்கின்ற கூட்டத்தார்களை நோக்கிக் கூட்டத்தீரே! கூட்டத்தீரே!
வத்தவநாட்டு மன்னனாகிய உதயணன் எளியேனைக் கொல்லும் பொருட்டுச்
செய்கின்ற கொடுமையைக் காணுங்கோள் ! என்றென்று பலகாலும்
முறையிடாநின்ற ஆரவாரச் சொற்களைக் கூறியழா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) கொடுபோவான்
வயந்தகனேனும் இந்நிகழ்ச்சிக்காரணம் உதயணனே யாகலின் ''வத்தவர்
பெருமகன் செய்வது'' என்றாள். கொலிய - கொல்லிய, கொல்லுதற்கு. குழுக்கள்
- விளி. பூசல் - ஆரவாரம.் சேயிழை: அன்மொழித்தொகை.
|