உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
எள்ளியு மிழித்து மின்னவை
பயிற்றி
முள்ளெயி றிலங்கு மொள்ளமர்
முறுவலர்
பட்டி மாக்கள் கட்டுரை
பகரும்
பெருங்கலி யாவணம் பிற்படப் போஒம்
175 வையத் தவளொடும் வயந்தகன்
கேட்பத்
|
|
(இதுவுமது)
171 - 175: எள்ளியும்..........கேட்ப்
|
|
(பொழிப்புரை) கூரிய தம் பற்கள்
விளங்கும்படி ஒளியுடைய புன்முறுவலையுடைய கயவர்கள் இவ்வாறு உதயணனை எள்ளியும்
நருமதையை இழித்தும் பேசா நின்ற இன்னோரன்ன பழி
மொழிகள் கூறா நிற்றலாலே பேராரவாரமுடையதாகிய அங்காடித்
தெருவினைக் கடந்து போகாநின்ற தேரின் கண்ணிருக்கின்ற அந்த நருமதையும்
வயந்தகனும் கேட்கும்படி என்க.
|
|
(விளக்கம்) கட்டுரை
பகர்வதனாலே பெருங்கலியை உடைத்தாகிய ஆவணம் என்க. வையத்தவள் - நருமதை.
வையம் - தேர்.
|