| (விளக்கம்)  (176 - 201) பூங்குழைமகளிர் ஓப்பிச் சுருக்கி   ஏந்தி ஏற்றி விடுத்து 
      இயைவித்துச் சுவைத்துப் (பின்னர்)  இசை தள்ளி   (முரன்று) மம்மர் எய்தி 
      இடுக நோக்கிப் பிறழக் கூர விம்மி உயிர்த்துக்   கோட்டிச் செல்க என்று 
      ஏற்றிச் செருக்கிக் கொண்டு பொறாது   நோக்கமொடு மழலை பயிற்றுப் 
      புடைத்துப் புலவிகொள் அவரது   திருமுகத்தைக் காட்சியினால் (தெரிந்து) தமது 
      நலம் திரிந்து கரிதலாலே   என வினையியையு காண்க.             நறவருந்தி மழலை பேசுதலானே அவர் மொழி   அந்நறவின் 
      மணங்கமழ்வதாகி என்றார். வளியின்கண் நிகழும் பண்பினை   ஒலியின் 
      மேலேற்றிக் கூறுதல் ஒரு வழுவாயினும் அமைத்துக் கொள்க.   பயிர் - 
      பயிர்தல். எய்தா ஒழுக்கம் என்றது அவர்தம் சொல்நடையை.   ஐது - மெல்லிது. 
      எயிறு : ஆகுபெயர். ஞிமிறு - வண்டு. மூசினவாகிய   கோதை என்க. தேர்ந்துணர் 
      காட்சி என்றது பதம்பார்க்கும் அறிவினை.   தலைவருடைய நலம் திரிந்து கரிய 
      என்க.  |