| (விளக்கம்)  பசுங்கதிர் 
      சுருங்கிய பசலைத்தாகி விசும்பு   எழத் தனது நெடுவெண்ணிலவின் நீர்மைக்கு 
      இரங்கி மகளிர்   முற்றம் நிற்பவே தேயும் வெண்மதிபோல என மாறி இயைத்துக் 
        கொள்க. பசுங்கதிர் என்றது இளஞாயிற்று மண்டிலத்தை.   
      ஞாயிற்றுமண்டிலம் தோன்றியவுடன் திங்கள் மண்டிலம் தனது   ஆற்றல் தேயாது 
      ஒளிமட்டும் தேய்தல் போன்று, வாசவதத்தை   முகந்தோன்றிய மாத்திரையே 
      உதயணன் மார்பின் வலிகுன்றாமல்   ஒளிமட்டும் தேய்ந் தொழிந்தது என்பது 
      கருத்து.   மார்பிற்கு - திங்கள் உவமை. நல்குரவு - வாசவதத்தையைத் 
        தழுவப்பெறாத நசையுடைமை என்க. அகலம் - மார்பு.   எவ்வம் - 
      ஈண்டு இளிவரவின் மேற்று.     இனி, பசுங்கதிர் என்பதனையும் திங்கட்கே 
      ஏற்றித்,   தேயும் வெண்டிங்கள் தனது நெடிய வெள்ளிய நிலவொளி   
      குறையும் தன்மைக்கு இரங்கி முறுவல் மகளிர் நிலைமுற்றத்தே   நிற்பவே 
      நாடோறும் வானத்தே எழுந்தோறும் தனது பசிய கதிர்   சுருங்கிய பசலையை 
      யுடையதாகத் தேயாநிற்றல் போல   வலியிற்றீராது ஒளியிற்குன்றி நல்கூர்ந்த 
      அகலம் என்று   கோடலுமாம். வலியிற்றீராது என்றது தானியங்கும் 
        வலிமையிற் குன்றாமல என்றவாறு. |