| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 36. சாங்கித்தாயுரை | 
|  | 
| கோமகன் குறித்தது கொண்டுகை 
      புனைந்து தாய்மகட் 
      டேரிய தன்வயி னுரைக்க
 | 
|  | 
| ( 
      சாங்கியத்தாய் செயல் 
      ) 57 - 58 : கோமகன்..........உரைக்க
 | 
|  | 
| (பொழிப்புரை)  பிரச்சோதனன் 
      நிலைமை இவ்வாறாக,   அம்மன்னன் உதயணனைத் தன் மகட்கு யாழாசிரியனாக்கக் 
      கருதிய  செயலையே முதலாகக்கெண்டு அவன் உதயணனை மருமகனாகக்   
      கொள்ளக் கருதுகின்றான் என்று சாங்கியத்தாய் தன் நெஞ்சினுள்ளே   
        ஊகித்துக்கொண்டு இந்நிகழ்ச்சியில் வாசவதத்தையின் கருத்து யாது 
        எனத் தெரிந்து கோடற்பொருட்டு அவள்பால் மேற்கூறிய தூதர்   
      வருகையைக் கூறாநிற்ப என்க. | 
|  | 
| (விளக்கம்)  கோமகன் - பிரச்சோதனன். 
      குறித்தது - உதயணனை   மருகனாக்கிக் கொள்ளக் கருதிய கருத்து. கைபுனைதல் - 
      தான் குறிப்பாக   உணர்ந்து கொண்ட செய்தியை முதலாகக் கொண்டு மேலும் 
      மேலும்   கற்பித்துக் கோடல். தாய் - செவிலித்தாயாகிய சாங்கியத்தாய். 
      தேரிய - தெளிய,   தன் என்றது வாசவதத்தையை. |