உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
36. சாங்கித்தாயுரை |
|
85 ஓதியு நுதலு மாதரை
நீவித் தக்கது
நோக்கான் பெற்றது
விரும்பி நுந்தை
நேரா னெஞ்சுகொள்
காரணம்
பைந்தொடித் தோளி பரிவறக்
கேளென இளமையும்
வனப்பு மில்லொடு வரவும் 90
வளமையுந் தறுகணும் வரம்பில்
கல்வியும் தேசத்
தமைதியு மாசில்
சூழ்ச்சியொ
டெண்வகை நிறைந்த நன்மகற்
கல்லது மகட்கொடை
நேரார் மதியோ
ராதலின்
அவையொருங் குடைமை யவர்வயி னின்மையின்
95 அதுபொய் யாத லதனினுந்
தேறெனக் காரணக்
கிளவி நீர
காட்டிச் செவிலி
தெளிப்பக் கவிழ்முக மெடுத்து
|
|
( இதுவுமது
)
85 - 97: ஓதியும்..........தெளிப்ப
|
|
(பொழிப்புரை) அவளுடைய கூந்தலையும்
நெற்றியையும் தடவிப் 'பசிய தொடியணிந்த தோளையுடைய வாசவதத்தாய்!
தகுதியுடையதிது என்று பாராதவனாய் அம்மன்னர்களால் தான் பெற்ற பொருளை
மட்டுமே விரும்பி அன்னவர்களுள் வைத்து யார்க்கும் உன்தந்தை மகட்கொடை
நேராத நெஞ்சமுடையனாதற்குக் காரணம் உண்டு; அதனை நின்துயர் அகலும்
பொருட்டுக் கேட்பாயாக! உலகின்கண் அறிவுடைய மன்னர்கள் பிறன் ஒருவனுக்கு
மகளை வழங்கக் கருதுமிடத்து அந்த மணமகன் இளமையும் அழகும்
உயர்குடிப் பிறப்பும் திருவும் மறமும் எல்லையற்ற கல்வியும் அரசுரிமையும்
குற்றமற்ற ஆராய்ச்சித் திறனும் ஆகிய இந்த எண்வகை நலனும் ஒருசேர அமைந்த
நன்மகனுக்கு வழங்க உடன்படுவதல்லது இந்நலமிலார்க்கு வழங்கக் கருதார்காண்!
உன் தந்தைபால் மகள் வேண்டித் தூது விடுத்த மன்னருள் வைத்து ஒருவரேனும்
அவ்வெண்வகை நலனும் ஒருங்கே பெற்றவர் இலர்; ஆதலின் நின் தந்தை நின்னை
ஒருவனுக்கு வழங்கக் கருதியுள்ளான் என்னுமது பொய்யாவதனை
இதனாலும் தெளிந்து கொள்வாயாக! என்று காரணங்களை யுணர்த்தும்
நன்னீர்மையுடைய மொழிகளைக் கூறிக் காட்டிச் செவிலியாகிய
சாங்கியத்தாய் தேற்றியதனாலே என்க.
|
|
(விளக்கம்) மாதர் - வாசவதத்தை.
தக்கது - மகட்கொடை நேர்தற்குத் தகுந்த சிறப்பு, தகுந்த சிறப்பை
நோக்கானாய்ப் பெற்றதனை மட்டும் விரும்பி மகட்கொடை நேராமைக்குரிய
காரணம் என்க. பரிவு - துயர். இல்லொடு வரவு - உயர்குடிப் பிறப்புடைமை.
வளமை - செல்வமுடைமை. தறுகண் - மறப்பண்புடைமை. தேசத்தை ஆளும் அமைதி:
அஃதாவது அரசுரிமை. சூழ்ச்சி என்றது, மதி நுட்பத்தை, மதியோர் -
அறிவுடையோர். அது - நுந்தை நின்னை ஒரு மன்னன் மகனுக்கு வழங்கக்
கருதுகின்றான் என்னும் அது என்றவாறு. நீர: பலவறி சொல். செலிலி -
சாங்கியத்தாய்.
|