| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 36. சாங்கித்தாயுரை | 
|  | 
| 220   கெங்கா தீரத்துத் தேசங் 
      கெழீஇ
 அங்காங் கொல்வனென் றாத்திரை 
      முன்னி
 வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப் 
      பட்டு
 வயிரச் சாத்தொடு வடதிசைப் 
      போகி
 அயிரிடு நெடுவழி யரசிடை யிருந்துழிப்ாகிக்
 | 
|  | 
| (இதுவுமது) 220 
      - 224 : கெங்கா..........இருந்துழி்
 | 
|  | 
| (பொழிப்புரை)  கங்கைப் பேரியாறு 
      பாயும் நாட்டகத்தே சென்று   அந்நாட்டின்கண் அமைந்த சிறந்த இடந்தோறும் 
      இடந்தோறும் தங்கித்   தங்கிச் செல்வேன் என்னும் குறிக் கோளோடு 
      யாத்திரை செய்யத்   தொடங்கிப் புதிய வழிப்போக்கர் நிறைந்ததொரு 
      பெருவழியை எய்தி   அதன்கண் வயிரமணி  வணிகர் கூட்டத்தோடு சேர்ந்து 
      வடதிசையிற்   சென்று நுண்மணல் மேடிட்டதொரு நெடிய வழியருகே நின்ற அரசமர 
        நீழலிலே இளைப்பாறி இருந்தேனாக; அவ்வமையத்தே என்க. | 
|  | 
| (விளக்கம்)  கெங்காதீரம் - 
      கங்கைப்பேரியாறு. தேசம் - நாடு.   கங்கையாறு பாயும் நாடென்றபடி ஒல்வன் - 
      சேர்வேன். ஆத்திரை - யாத்திரை.   வம்பலர் - புதியவராகிய 
      வழிப்போக்கர். வயிரச் சாத்து - வயிர வணிகர் குழு.   அயிர் - நுண்மணல். 
      அரசு - அரசமரம். |