உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
36. சாங்கித்தாயுரை |
|
245 கற்றோர் மொய்த்த முற்றவை
நடுவண்
தாழாப் பெரும்புகழ்க் காளக்
கடவுண்முன்
பாலக னென்னும் பண்ணவர்
படிவத்துக்
காள சமணன் காட்சி
நிறுப்ப
ஐம்பெருஞ் சமயமு மறந்தோற் றனவென 250
வேந்தவ ணுதலிய வேதா
சிரியரும்
தாந்தம் மருங்கிற் றாழங்
காட்டிச்
சாங்கிய சமயந் தாங்கிய
பின்னர்
நல்வினை நுனித்தோ னம்மொடு
வாழ்கெனப்
பல்வேல் வேந்தன் பரிவுசெய் தொழுகலின்
|
|
(இதுவுமது)
245 - 254 : கற்றோர்..........ஒழுகலின்
|
|
(பொழிப்புரை) கற்றுவல்ல
சான்றோர் குழுமிய நல்லவை நடுவண் சென்று மன்னன் முன்னிலையில்
தாழ்ச்சியில்லாத பெரிய புகழையுடைய காளமுனிவன் தலைமையில் எங்குழு
வினனாகிய பாலகன் என்னும் இயற்பெயரையுடையவனும், தவப்படிவம்
மேற்கொண்டவனுமாகிய காளசமணன் என்னும் சமயக் கணக்கன், பிற சமயத்தாரை
யெல்லாம் சொற்போரில் வென்று தனது சமய மெய்க்காட்சியை நிலை
நிறுத்தினனாக, ஏனை ஐவகைச் சமயமும் அறத்தாற் றோல்வியுற்றன, என்று
வேந்தன் கருதுதற்குக் காரணமாய் வைதிக சமயத்து ஆசிரியன்மாரும், தாம்
தாம் மேற்கொண்ட சமயத்தின்பால் தாழ்வுடைமை காட்டி ஆண்டு நிலை
நாட்டப்பட்ட சாங்கிய மதத்தையே மேற்கொள்வாராக; ஆயபின்னர்
நல்லறத்தை நுனித்துணர்ந்து நிலை நாட்டிய சான்றோன் நம் மரண்மனைக்கண்
எமக்கு ஆக்கமாக எம்மோடு உறைவானாக என்று பலவாகிய வேற்படையையுடைய
பிரச்சோதன மன்னன் அன்பு செய்து ஒழுகுதலாலே என்க.
|
|
(விளக்கம்) முற்றவை - நல்லவைக்குரிய
இலக்கணமெல்லாம் நிரம்பிய அவை. காளக்கடவுள் - காளமுனிவன்.
வேதாசிரியர் - வைதிக சமயக்கணக்கர்.
|