|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 36. சாங்கித்தாயுரை | | 275 தன்வயிற் பட்ட
தவ்வயிற் கிளரி
அகம்புரி செம்மை யன்பிற் காட்டி
மனமுணக் கிளந்த மந்திரக்
கோட்டியுட் புள்ளு
மாவு முள்ளுறுத் தியன்ற
ஆண்பெயர்க் கிழவி நாண்மகிழ்
கடவ 280 வழுக்கிக் கூறினும் வடுவென
நாணி ஒழுக்க
நுனித்த வூராண்
மகளிர்
தாநயந் தரற்றினுந் தக்குழி
யல்லது
காமுறற் கொவ்வாக் கயக்கமி
லாளநீ
ஒட்டாக் கணிகையைப் பெட்டனை யென்பது
285 புலவோர் தெரியிற் பொருத்தமின்
றாகி அலவலை
நீர்த்தா லத்தைநின் னலரெனனத்
| |
(இதுவுமது)
275 - 286 : தன்வயின்..........அலர்என
| | (பொழிப்புரை) இவ்வாறு தனது
வரலாற்றை அவ்விடத்தே அவனுக்கு மிகுத்துக் கூறித் தனது உள்ளம்
விரும்புகின்ற செம்மையைத் தனது அன்புடைமையாலே விளக்கி, அவன் மனத்தைக்
கவரும்படி கூறிய இந்த மறையாராய்ச்சிக் கூட்டத்தின்கண் மீண்டும் உதயணனை
நோக்கிப் 'பெருமானே! பறவைகளினும் விலங்குகளினும் வைத்துங் கூட ஆண்பாற்
பறவைப் பெயரையும் ஆண்பால் விலங்குப் பெயரையும் தாம் காமபானம்
அருந்தியுள்ள மயக்கப் பொழுதின் கண்ணும் அம்மயக்கம் செலுத்துதலாலே
நாவழுக்கிக் கூறினும், தங்கற்பிற்கு வடுவாகும் என்று நாணி,
நல்லொழுக்கத்தையே நுண்ணிதாக மேற்கொள்ளுதலையும், ஒப்புரவொழுகுதலையும்
உடைய குலமகளிர் தாம் நின்னைப் பெரிதும் விரும்பிப் புலம்புவாரேனும்,
அவருள்ளும் நின் பெருந்தகைமைக்கு ஒவ்வுமிடத்தன்றி ஏனையிடத்தே காமுறுதற்
கொவ்வாத திண்ணிய மனம் படைத்த நீ, நின்பால் மனம் பொருந்தாத ஒரு
நாடகக் கணிகையைக் காமுற்று அரற்றா நின்றனை என்றீண்டோர்
அலர் எழுந்துளது; அவ்வலரை அறிவான் மிக்கோர் ஆராய்ந்து காணின்
எவ்வாற்றாலும் பொருத்தமிலதாகி அவர்க்கு மனச்சுழற்சியை உண்டாக்கும்
தன்மை யுடைத்தாயிருக்கின்றது என்று என்க.
| | (விளக்கம்) தன்வயிற் பட்டது -
தன்பானிகழ்ந்த நிகழ்ச்சி, கிளரி - கிளர்ந்து கூறி, அகத்தே
விரும்புகின்ற விருப்பத்தின் செம்மை ஈண்டுத் தூய்மை மேற்று. அன்பு கெழுமிய
சொல்லானும் மெய்ப்பாட்டானும் காட்டி என்க. மந்திரக் கோட்டி - மறை
யாராய்தற்குக் கூடிய கூட்டம். புள்ளுள் சேவல் போல்வன விலங்கிற் களிறு
போல்வன என்க. இவையும் பிற ஆண்பாற் பெயராதலின் கூற நாணுவர் என்றவாறு.
ஊராண் - ஒப்புரவு, கயக்கம் - கலக்கம். கணிகை - நருமதை, பெட்டனை -
காமுற்றனை, புலவோர்க்கு அலவலை நீர்த்தென்க. அலவலை - சுழற்சி. அத்தை:
அசை. அலர் - பழிச்சொல்.
|
|