உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
36. சாங்கித்தாயுரை |
|
நன்மணி யைம்பா
னருமதைக் கரற்றிய 305 மன்ன குமரன் மனம்பிறி
தாயினும் எந்தையும்
யாயு மின்னகை
யாயத்துப்
பைந்தொடிச் சுற்றமும் பலபா
ராட்ட மாசில
வீணை மடமொழிக்
கீந்தோன் ஆசா
னென்னுஞ் சொற்பிறி தாமோ 310 அண்ணற் குமரற்
கடிச்செருப்
பாகெனத் தன் மனங்
கொண்டவ டாவ முற்றிச்
|
|
(இதுவுமது) 304 - 311 :
நன்மணி..........மனங்கொண்டவள்
|
|
(பொழிப்புரை) நன்னிறமுடைய
நீலமணி போன்ற நிறமுடைய கூந்தலையுடைய நருமதை என்னும் நாடகக்கணிகையை
நயந்து அவள் பொருட்டு அரற்றிய உதயண வேந்தன் உள்ளம் பிறழ்ந்து
போயினும் என் தந்தையும் தாயும் இனிய நகைப்பையுடைய கூட்டத்தாராகிய பசிய
வளைய லணிந்த தோழியரும் பலபடியாகப் பாராட்டக் குற்றமற்ற யாழ்
வித்தையினை மடப்பமுடைய மொழியினையுடைய வாசவதத்தைக்குக் கற்பித்து
உதயணன் அவட்கு ஆசிரியனாயிருந்தான் என்று உலகங்கூறும் மொழி அழியுமோ?
அழியாதன்றே. இங்ஙனமாகலின் தலைமைத்தன்மையுடைய உதயணகுமரனுக்கே
இனி யான் காற்செருப்பு ஆகக்கடவேன் என்று தன் மனத்தே உறுதி செய்து
கொண்டவள் என்க.
|
|
(விளக்கம்) மணி - ஈண்டு நீலமணி,
ஐம்பால் - கூந்தல். நருமதை பொருட்டு என்க. எந்தை முதலியோர் மாசில்
வீணை மட மொழிக்கீந்தோன் என்றும் ஆசான் என்றும் பாராட்டவும் உலகமும்
அங்ஙனம் கூறும் மொழி பிறிதாமோ என்றவாறு. பிறிதாமோ என்றது -
மாறுபடுமோ? அழியுமோ? என்றவாறு. அடிச்செருப்பாதல் ஆவது, அவனுக்குத்
தாழ்ந்து பணி செய்து கிடத்தல் என்க.
|