உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
36. சாங்கித்தாயுரை |
|
இன்றைக்
கேள்வி யிடையிடு மெனினும் 345 சென்றையா
நங்கையைச் செவ்வி
நோக்கி இன்றுணை
மகளிரொ டொன்றியான்
விடுத்தரும் சொல்லொடு
படுத்துச் செல்கவென் களிறென
|
|
(இதுவுமது)
344 - 347 : இன்றை..........களிறென
|
|
(பொழிப்புரை) ஆதலால் என்
களிறுபோல்வோய்! வாசவதத்தைக்கு இற்றைநாள் யாழ்க்கேள்வி இடையீடு
படினும் படுக! யான் சென்று ஆங்கு வருந்திக்கிடக்கும் வாசவதத்தையின்
நிலைமையை நோக்கி இனிய துணைவராகிய தோழியரோடு கூடி யான் அவர்பாற் கூறி
விடுக்கும் செய்திக்கிணங்க நீ செல்வாயாக! என்று அறிவுறுத்து
என்க.
|
|
(விளக்கம்) அயாம் - வருந்தும். செவ்வி
- நிலைமை. என் களிறு என்றது விளி.
|