உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
முகிழ்த்தகை முறுவன் முனிவின்று
பயிற்றிக்
கடவர் வகுத்த கரும
நாளாற்
கடவதை யாதலின் மடவர லாயத்து
85 நங்கை கேள்வியு நல்லவைப்
படுக்கென
வந்துரைத் தனரால் வத்தவன் றமரென
|
|
(உதயணன்
சொல்லிடுத்தல்)
82 - 86: முகிழ்..........தமரென
|
|
(பொழிப்புரை) உதயணகுமரன்
விடுத்த தூதர் பிரச்சோதனன் திருமுன் வந்து வணங்கிப் பெருமானே! உதயணன்
முல்லை யரும்பை யொத்த பற்களையுடைய வாசவதத்தையையும்
வெறுப்பின்றி யாழ்பயில்வித்து அப் பயிற்சி மைந்தர் பயிற்சி போன்று
நாள் குறித்தற்குரிய கணிகள் கூறியதொரு செயற்கியன்ற நன்னாளிலே
அரங்கேற்றுவித்தல் செய்யக்கடவதாகலின் மகளிர் கூட்டத்தையுடைய
அந்நங்கையின் யாழ்க்கேள்வியையும் அரங்கேற்றம் செய்தருள்க என்று
கூறிவிடுத்தனன் என்று கூறாநின்றனர் என்க.
|
|
(விளக்கம்) வத்தவன்
பயிற்றிக் கடவதையாதலின் அவைப்படுக்கென அறிவிக்கும்படி கூறினன் என்று
அவன் தமர் வந்து (மன்னன் பால்) உரைத்தனர் என்க. முகிழ்த்தகை முறுவல்:
பன்மொழித் தொடர், வாசவதத்தை. முனிவு - வெறுப்பு. கடவர் - நாள் கூறும்
கடமையுடைய கணிகள். கருமம் செய்தற்குரிய நன்னாளில் என்க. நங்கை -
வாசவதத்தை.
|