உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
இறைஞ்சிய மாதரை யெடுத்தனன்
றழீஇப்
பிதிர்சுணங் காகமொடு பெருந்தோ
ணீவிக்
கதிர்பொற் பட்டமொடு கனங்குழை திருத்தி
165 ஒண்ணுதன் மாதரை யொருகை
பற்றிப்
பொன்னிழை தாயுழைப் போகெனப் புகலலும்
|
|
(பிரச்சோதனன்
செயல்) 162 - 166:
இறைஞ்சிய..........புகலலும்
|
|
(பொழிப்புரை) இங்ஙனம்
தன் அடியில் வீழ்ந்து வணங்கிய வாசவதத்தையை மன்னவன் தன்னிரு கைகளானும்
தழுவி எடுத்து அவளது தேமல் படர்ந்த மெய்யினையும் பெரிய
தோளையும் தடவியவனாய் அவள் அணிந்திருந்த ஒளி வீசும் பொற்பட்டமும்
கனவிய குழையுமாகிய அணிகலன்களைத் திருத்தி ஒளி நெற்றியையுடைய
அவ்வாசவதத்தையின் ஒரு கையைப் பற்றிப் 'பொன்னணி கலனுடையோய்! நீ இனி
நின் தாயினிடம் செல்க' என்று பணித்துவிடலும் என்க.
|
|
(விளக்கம்) மாதர் -
வாசவதத்தை. பிதிர் சுணங்கு ஆகம் : வினைத்தொகை. கதிர் பொற்பட்டம்:
வினைத்தொகை. பொன்னிழை : அன்மொழித் தொகை; விளி.
|