உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
தான்முன்
கண்ட தவற்றின ளாதலிற்
சென்ற வாயிற் கொன்றல
ளூடிப்
புலவியிற் கருகிய திருமுக மிறைபி்
170 குவகையின் மகிழ்ந்த முறுவல
ளாகிக்
கடைக்கட் டூதாற் காவலற்
கடைஇச்
சுடர்க்குழை பயந்தோள் சொல்லா ணிற்ப
|
|
(இராசமாதேவி
மகிழ்தல்) 167
- 172: தான்முன்.........நிற்ப
|
|
(பொழிப்புரை) ஒளியுடைய
குழையணிந்த வாசவதத்தையை ஈன்ற கோப்பெருந்தேவி தன் கணவனாகிய
பிரச்சோதனன்பால் ஒரு தவற்றினைக் கண்டமையாலே ஊடி அவ்வூடலை உணர்த்த
அம்மன்னவன் தன்பால் விடுத்த வாயில்கள் இரப்புரையானும்
ஊடலுணர்ந்து மன்னனோடு இயையாதே அப்புலவியாலே தனது அழகிய முகம் கருதி
நின்றாள். ஆகலின் தன்னை நோக்கி வருகின்ற வாசவதத்தையைக் காண்டலும்,
அம்முகத்தின்கண் உவகையானே மகிழ்ந்த புன்முறுவலையுடையவளாய்த் தன்
கடைக்கண்ணாகிய தூதினாலே பிரச்சோதன மன்னனை வினவித் திருவாயால்
யாதொன்றும் சொல்லாடாளாய் நிற்ப என்க.
|
|
(விளக்கம்) சுடர்க்குழை
பயந்தோள் - கோப்பெருந்தேவி. வாயில் - பாணன் முதலியோர்.
இறைமகளைக் கண்டு உவகையாலே மகிழ்ந்த முறுவலையுடையவளாகி என்க.
கண்டதவற்றினள் - என்றது தவறு கண்டவள் என்றவாறு. இது சொல்லாடாமைக்கு
ஏதுக் கூறியவாறு. கடைக் கண்ணாகிய தூது என்க. கடைஇ - வினவி. இதனாற்
கூறியது மன்னவன் வாசவதத்தையைத் தாயின்பாற் செல்க என்று ஏவியது கேட்ட
கோப்பெருந்தேவி முன்னர் அவனோடு ஊடி வாயில்கட்கும் ஊடல்
தீராதவள், மகள் வருகையாலே கருகிய திருமுக மலர்ந்து குறிப்பால் அவளை
வரவேற்பவள் கணவனோடிருந்த ஊடலும் தீர்ந்து அவனைக் கடைக்கண்ணானோக்கி
யான் யாது செய்தல் வேண்டும் என்று குறிப்பான் வினவிச் சொல்லாடாமனின்றாள்
என்பதாம். வினவியது ஊடல் தீர்ந்தமையை உணர்த்தற்கு என்க.
சொல்லாடாமைக்குக் காரணம் வலியவே ஊடல் தீர்வதற்கு நாணியபடியாம்.
|