உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
37. விழாக் கொண்டது |
|
முன்யா
னிவனை முருக்கலும் வேண்டினென் 200
பின்யா னிவனைப் பெருக்கலு
முற்றனென் எமர
னாயி னிறைகொடுத் தகல்க
அமர னாயி னமைவொடு
நிற்கென
அடல்வேற் றானை யாருணி
யரசற்கு ஞாலத்
தின்னுயிர் வாழ்வோர் நாப்பட் 205
காலம் பார்க்குங் காலன்
போல வெல்போ
ருதயணன் வெஃறுணை யாகப்
பல்கோ டியானைப் பாலகன்
வருமெனக்
கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொ
லோலை
அரக்குப்பொறி யொற்றி யாணையிற் போக்கி
|
|
(இதுவுமது)
199 -209:
முன்யான்..........போக்கி
|
|
(பொழிப்புரை) இன்னும்,
கோசம்பி நகரத்தினை அற்றம் பார்த்துக் கைப்பற்றிக்கொண்ட
கொலைத்தொழிலையுடைய வேலேந்திய ஆருணி அரசனுக்கு 'முன்னர் யான் உதயணனை
அழித்தலை விரும்பினேன். இப்பொழுதோ அவனைப் பெருக்கி நிலை
நிறுத்தவும் முன்வந்துள்ளேன். ஆதலால் நீ எனக்கு நண்பனேயாயின் எனக்குத்
திறைப்பொருள் கொடுத்து அந்நகரத்தையும் கைவிட்டு நின்னாட்டிற்குச்
செல்லுதல் வேண்டும்; அல்லது பகைவனேயாகி என்னோடும் போராற்றும்
கருத்துடையையாயின், போராற்றுதற்கு அமைந்து நிற்பாயாக !
உலகத்தின்கண் வாழாநின்ற மாந்தர் நடுவண் அவர் ஆயுட்காலத்தை ஆராய்ந்து
அக்காலம் முடிந்தவர் மேல் தப்பாமற் செல்லும் கூற்றுவன் போல வெல்லும்
போர்த்திறமமைந்த உதயணமன்னன் நின்பாற் போர்செய்தற்கு இப்பொழுதே
வருகுவன் ; மேலும் அப்போரினை வென்று அவனுக்குத் துணையாம் பொருட்டுப் பல
கோடி யானை களையுடைய பெரும்படையோடு, என் மகன் பாலகனும்
வருகுவன்,' என்று நூல்வழிச் சிறந்த கடிய சொற்பொறித்த ஓலையின்கண் நமது
அரக்கு இலச்சினை பொறித்து நமது கட்டளையாக இன்றே போக்குமின் என்றும்
என்க.
|
|
(விளக்கம்) அரசன்
அமைச்சரை நோக்கி இவ்வாறு செய்ம்மின் என்று கட்டளையிடுகின்றான் என்பது
கருத்து. இவன் என்றது - உதயணனை என்றவாறு. எமரன் - எம் நண்பரைச்
சார்ந்தவன் என்றவாறு. இறை - திறைப்பொருள். அந் நாட்டைவிட்டு அகல்க
என்றவாறு. அமரன் - அமரை மேற்கொண்டவன். அடல்வேற்றானை
ஆருணியரசன் என்றது இகழ்ச்சி. அவன் கோசம்பியை ஆள்வது ஆற்றலாலன்று
வஞ்சத்தால் என்பது குறிப்பு. நின்னை அழித்தற்குரிய கால வரவினை நோக்கி
இதுகாறும் உதயணன் வாளாவிருந்தான். இப்பொழுது அந்தக்காலமும் வந்துற்றது,
இனி நீ உய்வதரிது என்பது தோன்ற "ஞாலத்தின்னுயிர் வாழ்வோர் நாப்பட்
காலம் பார்க்கும் காலன்போல வெல்போர் உதயணன்" என்று உவமை
எடுத்தோதினன். உதயணன் வரும் என்றும் இயைத்துக் கொள்க. பாலகன் -
பிரச்சோதனன் மகன். கணக்குத்துறை - நூற்றுறை. கடுஞசொல் - கடுமையான
கட்டளையையுடைய சொல்.
|