| (விளக்கம்)  காற்கலிங்கம் 
      - கீழாடை. கால் கருங்கலிங்கம்   என மாறுக. காஅழ் - மேகலையணி. பொள்ளென 
      : விரைவுக்  குறிப்பு. ஆடுதலானே முலையிடை முத்துறழ் ஆரம் துளங்கிற்று, 
        குழை எருத்திலுரிஞ்சிற்று என்பது கருத்து. ஓச்சி - வீசி.   
      தேவராட்டியர் அணியும் பளிக்குமணி மாலையை முத்துறழ் மாலை   என்றார் என்க. 
      கொடும்பூண் - வளைந்த அணிகலன். பேயேறி   ஆடும்பொழுது முரசு முழக்குவது 
      மரபு.      பாகீரதி ஏறி நக்கு ஆரமும் குழையும் எருத்துரிஞ்சப் பரப்பி ஓச்சி 
        ஆடி என்க. ஆரமும் குழையும் எருத்துரிஞ்ச என்பது கருத்தாகக் 
      கொள்க.      தெய்வம் ஏறியாடுவோரியல்பினை இயற்கை நவிற்சியாக ஈண்டுக் 
        கூறப்பட்டமை யுணர்க. இன்னும் ''தெய்வமுற்றோ னவிநயம் செப்பின், 
        கைவிட்டெறிந்த கலக்கமுடைமையும், மடித்தெயிறு கவ்விய 
      வாய்த்தொழி  லுடைமையும், துடித்த புருவமும் துளங்கிய நிலையும், செய்ய முகமும், 
        சேர்ந்த செருக்கும், எய்தும் என்ப இயல்புணர்ந் தோரே'' எனவும், 
        (சிலப் - 12: 7 - 19. உரை - மேற்) பிறர் கூற்றானுமுணர்க. |