உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
            இறைவன் பணியென் றிறைகொண் டீண்டி
           நிறைபுனற் புகாஅர் நின்னகத் தோரென
           விழாக்கோ ளாளர் விரைந்துசென் றுரைத்தலும்
 
        (விழாக் கோளாளர் அரசனுக்குக் கூறுதல்)
          86 - 88 :  இறைவன்............உரைத்தலும்
 
(பொழிப்புரை) இவ்வாறு நகர மக்கள் இஃது இறைவன் பணியென்று குழுமித் தங்குதலை அறிந்த விழாக்கோளாளர், விரைந்து மன்னன்பாற் சென்று பெருமானே அரண்மனையகத்தே வாழுவோர் இன்னும் நிறைந்த நீரையுடை திருநீர்ப் பொய்கைக்குப் போகப் புறப்பட்டிலர், என்றுணர்த்தா நிற்றலாலே என்க.
 
(விளக்கம்) நகர்வாழ்மக்கள்எஞ்சாமல்சென்றமை கண்டு விழாக் கோளாளர் சென்று இனி அரசன் முதலியோர் புறப்படலாம் என்று குறிப்பால் உணர்த்தியபடியாம். ஈண்டி - ஈண்ட.