| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 38. விழா வாத்திரை | 
|  | 
| புயன்மலை தொடுத்துப் பூமலர் 
      துதைந்து வியன்கா மண்டிய வெள்ளம் 
      போல
 மாட மூதூர் மறுகிடை 
      மண்டிக்
 கோடுற நிவந்து மாதிரத் துழிதரும்
 275    கொண்மூக் குழாத்திற் கண்ணுற 
      மயங்கி
 ஒண்ணுதன் மகளி ரூர்தி 
      யொழுக்கினம்
 புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை 
      முன்னித்
 தண்பொழில் கவைஇய சண்பகக் 
      காவிற்
 கண்டோர் மருளக் கண்டத் திறுத்த
 | 
|  | 
| (மகளிர் 
      பொய்கைக் கரையைச் 
      சேர்தல்) 271 - 279 :  
      புயல்..........இறுத்த
 | 
|  | 
| (பொழிப்புரை)  அகன்ற 
      காட்டினூடே பாய்கின்றதொரு வெள்ளமே   போன்று ஒள்ளிய நுதலையுடைய 
      அம்மகளிரின் ஊர்தித்திர்ள் மாடங்களை   யுடைய அவ்வுஞ்சை நகரத்தின் வீதிகளினூடே 
       சென்று பின்னர் நகரின்   புறத்தே மலைச்சிகரங்களிலே தவழும்படி 
      உயர்ந்து திசைகளிலே பரவிப்   புறத்தே மலைச்சிகரங்களிலே  தவழும்படி 
      உயர்ந்து திசைகளிலே பரவித்   தங்கும் முகிற் கூட்டம் போன்று இடந்தோறும் 
      விரவிப் பறவைகளின்   ஆரவாரத்தையுடைய திருநீர்ப் பொய்கையினது 
      மலர்களையுடைய துறையை   அடைந்து ஆங்குக் குளிர்ந்த சோலைகளாற் 
      சூழப்பட்டதொரு சண்பகப்   பொழிலின்கண் கண்டோர் வியக்கும்படி 
      கண்டத்திரை மண்டபங்களிலே தங்கிய   என்க. | 
|  | 
| (விளக்கம்)  ஊர்தியினம்இறுத்த 
      என்க. நகரவீதியிற்சென்றமைக்கு   வெள்ளமும், பொய்கை மருங்கிற் 
      போந்தமைக்குக் கொண்மூக் குழாமும்   உவமையென்க. கொண்மூ -முகில். |