உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
38. விழா வாத்திரை |
|
வல்லே
வருகவில் லாளன்
விரைந்தென விட்ட
மாற்றம் பெட்டனன்
பேணிச் சென்ற
காட்சிச் சிவேதனைக் காட்டிப்
305 பொன்னறை காவலர் பொறிவயிற்
படுகெனச் செண்ண
மகளிர் செப்பிற்
காட்டிய வண்ணஞ்
சூட்டின கண்ணியிற்
கிடந்த பனிப்பூங்
குவளை பயத்தின்
வளர்த்த தனிப்பூப்
பிடித்த தடக்கைய னாகி
310 நெடுநிலை மாநகர் நில்லான்
போதந் திடுமணன்
முற்றத் திளையரு
ளியன்று படுமணி
யிரும்பிடிப் பக்க நண்ணிப்
|
|
(உதயணன்
செயல்) 302
- 312 : வல்லே..........நண்ணி
|
|
(பொழிப்புரை) சிவேதனை
நோக்கி, "வில்லாளனாகிய உதயணகுமரன்ஈண்டு விரைந்து வரக்கடவன்" என்று
கூறி விடுத்தலாலே அச்செய்தி கேட்ட உதயணனும் விரும்பி அதனை
ஏற்றுக்கொள்ள, பசும்பொன் கொடுபோன காவலர் அச்சிவேதனுக்கு
அப்பொற்பொதியின் இலச்சினையைப் பார்த்தருள்க என்று காட்டாநிற்ப,
உதயணன் ஒப்பனை மகளிர் பூஞ்செப்பிற் கொணர்ந்து காட்டிய நிறமூட்டப்பட்ட
நெற்றிமாலையொடு கிடந்ததும், பயன்பட வளர்க்கப்பட்டதும்,
ஆகிய குளிர்ந்த பூவையுடைய குவளையினது ஒற்றைப் பூவைப்பிடித்த பெரிய
கையையுடையவனாகி நீண்ட நிலையினையுடைய அரண்மனைக்கண் காலந்தாழ்த்த
நில்லாதவனாய்ச் சென்று, கொணர்ந்து பரப்பிய புதுமணலையுடைய முற்றத்தே தனது
வரவினை எதிர்பார்த்து நின்ற இளமையுடைய நண்பரோடு கூடி ஒலிக்கும்
மணியையுடைய பெரிய பிடியானையாகிய பத்திராபதியின் பக்கலிலே சென்று
அதனைக் கூர்ந்து நோக்கி என்க..
|
|
(விளக்கம்) வல்லை
- விரைந்து. வில்லாளன்: உதயணகுமரன். விரைவாக அழைத்து வருக!
என்றவாறு. மாற்றம் - செய்தி. பேணி - பேண. பொபிறை
காவலர் சிவேதனுக்குப் பொறிவயிற் படுகெனக் காட்ட என்க. செண்ணம் -
ஒப்பனை. பயம் - பயன். தாழியிலிட்டு வளர்த்த. தனிப்பூ - ஒற்றைப்பூ.
குவளைப்பூவினை மன்னர் கைக்கொள்ளல் வழக்கம். நகர் - அரண்மனை; உதயணன்
மாளிகையுமாம். முற்றம் - தலைப்பெருவாயில். இளையர் - ஏவலிளையருமாம்.
பிடி - பத்திராபதி. கூர்ந்து நோக்கி என வருவித்தோதுக.
|