(பொழிப்புரை) பழிச்சொல்
நீங்கிய விளங்கிய குலத்திற் பிறந்தவரும் பிறர் இடித்துரைக்குஞ்
சொற்களைக் கேட்க ஒருப்படாத மானமுடையவரும், இலக்கணப்படி
தொழிலாற்றுபவரும், அகத்தோ பொருந்துமாறு கோக்கப்பட்ட முகவாரினைக்
கைக்கொண்டு ஊரும் வலிய தொழிலையுடைய வரும் ஆகிய பாகர்கள் ஏறி
நிற்பனவும், ஆகிய ஒப்பனை செய்யப்பட்ட நெடிய தேர்களும், தம்மைப்
புறஞ்சூழ்ந்து வாரா நிற்பக் காற்றை ஒத்த செலவினையுடைய வேறுபல
புரவிகளையும் களிற்றியானைகளையும் பரப்பிக் கொண்டு, பிரச்சோதனமன்னன்
மக்கள் அப்படைநாப்பண் வாராநிற்ப, அழகிய சிவந்த கொடிகளைத் தெருக்களிலே
பரப்பிப் போரின்கண் மிகுதற்குக் காரணமான மாலையுடனே அப்படையுடனே கூடி
உதயணனும் பிறருமாகிய நம்பிமார் சென்று அத்திருநீர்ப்பொய்கை மருங்கின்
மன்னவன் இருந்த குளிர்ந்த பொழிலாகிய சோலைக்கண் சென்று
தங்குவாராயினர் என்க.
(விளக்கம்) தேர்களின்
வண்ணனையாக வருகின்ற இப்பாடற் பகுதியில் அத்தேரின் உறுப்புக்களின்
பெயராக வருகின்ற பல சொற்கட்குப் பொருள் நன்கு விளக்கமாகத்
தோன்றவில்லை. இப்பகுதியை நுண்மதியுடையோர் ஆராய்ந்து பொருள்கோடல்
நன்றாகும்.