உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
தரிப்பொற் கிண்கிணி யார்ப்ப
வியலிக் கருங்கண்
மகளிர் கைபுடைத் தோப்ப 20 இருங்கண்
விசும்பக மிறகுறப்
பரப்பிக்
கருங்கயல் கொண்ட கவுள
வாகிப்
பொங்கிரும் புன்னைப் பூம்பொழின்
முன்னிச் செங்கா
னாரை செல்வன காண்மின்
|
|
(நாரைகளின்
செயல்) 18 - 23:
அரிப்பொன்..........காண்மின்
|
|
(பொழிப்புரை) ஏறிநிற்கின்ற கரிய
கண்ணையுடைய மகளிர் தம் காலணியாகிய தவளைவாய்ப் பொற் கிண்கிணி முரலும்படி
நடந்து தமது கையைத் தட்டி ஓட்டுதலாலே சிவந்த காலையுடைய
நாரைகள் வெருவிப் பெரிய இடத்தையுடைய வானவெளியின்கண் தமது சிறகுகளை
மிகவும் பரப்பிக் கொண்டு தாம் இரையாகப் பற்றிய கரிய கயல்மீனை
அடக்கிக் கொண்ட கவுளையுடையவாய் ஓங்கிய கரிய புன்னை
மரங்களையுடைய பூம் பொழிலை யடையக் கருதிப் பறந்து செல்வனவற்றைக்
காணுங்கோள்! என்க.
|
|
(விளக்கம்) நிலாமுற்றத்தே மகளிர் இயலிப்புடைத்து ஒப்பச செங்கானாரை, பரப்பி ஆகி
முன்னிச் செல்வனவற்றைக் காண்மின் என்க. அரி - தவளை. தவளைவாய்
போன்ற வாயமைந்த கிண்கிணி. ஓப்ப - ஓட்ட. இருங்கண் -
பெரிய இடம் - கரியஇடமுமாம்.
|