உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
நின்வயிற் காத னில்லா
தூர்தரும்
பூம்புனன் மடந்தையைப் புணர்ந்துவிளை
யாடித்
தேம்பட மொழிந்து வேம்புமனத்
தடக்கி வார
லோவென வாய்திறந்து மிழற்றி
205 ஓராது புலக்குமோ ரொள்ளிழை காண்மின்
|
|
(இதுவுமது)
201-205: நின்..........காண்மின்
|
|
(பொழிப்புரை) ஏடா! நின்பாற்
காதல்கொண்டு நின்பால் சிறிதுபொழுதேனும் நில்லாமல் ஓடாநின்ற
மலர்சூடிவருகின்ற இந்த நீர்மகளை நீ நாணமின்றி இத்துணைப்பொழுதும் வலிந்து
தழுவி விளையாடி வருவோய் என்பால் நினக்கு அன்பில்லாதிருக்கவேயும்
அன்புடையாய்போல இனிமையுண்டாகப் பேசி என்பால் நினக்கியல்பாக
வமைந்த வெறுப்பினை நெஞ்சத்தூடே யான் அறியாதபடி
மறைத்துக்கொண்டு ஈண்டு என்மருங்கே வாராதே கொள்!' என்று தனது அழகிய
வாய்மலர்ந்து மிழற்றி அவன் நிலைமையினை ஆராயாமலே ஊடிக்கொள்கின்ற
ஒள்ளிய அணிகலன் அணிந்த அந்நங்கையைக் காணுங்கோள்; என்க.
|
|
(விளக்கம்) காதலாலே நில்லாது என்க. புனன்மடந்தை - நீராகிய மடந்தை, தேம் இனிமை
தேனுமாம், வேம்பு: ஆகுபெயர்; வெறுப்பு, வாரல் : வியங்கோள்,
எதிர்மறை.
|