உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
355
தடம்பெருங் கண்ணி தலைகவிழ்த்
திறைஞ்சிச்
செறிப்பி னாகிய செய்கையி
னெரீஇயவள்
குறிப்பிற் கொண்டனன் கோதை
யென்ப
தயலோர் கருதி னற்றந்
தருமெனக்
கயலேர் நெடுங்கண் கடும்பனி கால 360
மாலை கவர்ந்து மற்றவற்
கீத்தனை
கோல வைவே லேனைய
குமரர்க்
கறியக் கூறுவெ னஞ்சுவை
யாயிற்
பெயர்த்துத் தம்மெனச் செயிர்த்தவ
ணோக்கி
நீரணி யாட்டொடு நெஞ்சுநொந் துரைக்கும்
365 வாணிக மகளின் மடத்தகை காண்மின்
|
|
(இதுவுமது) 355 - 365:
தடம்........காண்மின்
|
|
(பொழிப்புரை) மிகவும் பெரிய
விழிகளையுடைய அந்நங்கை தனது தலையைப் பெரிதும் வளைத்துக்
குனிந்து 'அந்தோ ! என் பொன்னரிமாலை அவன்றலையிருப்பதனை அயலோர்
அறியின் என்னாம்! அயலோர் அவள் தனக்குரிய அடக்கமான செயலினின்றும்
நீங்கி இம்மாலையை நீரின் விடுதலாலே அவள் குறிப் பறிந்து
இவன் அதனைக் கைக்கொண்டனன் என்றன்றோ கருதா நிற்பர் ; அங்ஙன்மாயின
அஃது என்திறத்தே பெருங்குற்றந்தருமே என்று பெரிதும் அஞ்சுபவளாய்த்
தனது கயல்மீன் போன்ற நெடிய கண்கள் துளிப்பக் கலங்கி
அந்நீர்ப்பெருக்கினைச் சினந்து நோக்கி 'பேதைநீரே! என்
பொன்னரிமாலையைக் கவர்ந்து ஏதிலானொருவனுக்குக் கொடுத்தொழிந்தனை!
அடாத இந்தச்செயலை யான் அழகிய கூர்வேல் ஏந்தியவரும் இவனல்லாதவருமாகிய
என் தமையன்மார் அறியும்படி கூறுவேன்காண்! அவர்க்கு நீ
அஞ்சுவை அல்லையோ? அஞ்சுவாயெனின் என் மாலையை மீட்டு என்னிடம்
தந்துவிடுக! என்று அந்நீர் விளையாட்டோடு தன்மனம் நொந்து கூறாநின்ற
அச்சேனைவணிகன் செல்வியின் பேதைமையைக் காணுங்கோள்!
என்க.
|
|
(விளக்கம்) தட - பெரிய; மிகப்பெரிய என்க. செறிப்பு - அடக்கம்.
ஒரீஇ - நீங்கி. இவள் விடுதலாலே இவள்குறிப்பின் அவன் கொண்டனன் என்று
கருதுப என்பது கருத்து. அற்றம் - நாணழிவு. இவனையல்லாத என்
தமையன்மாராகிய குமரர்க்கென்ற வாறு. தம் - தகுதி. மடத்தகை -
பேதைமையின் தகுதி.
|