மூலம்
உரை
1. உஞ்சைக்காண்டம்
40. உவந்தவை காட்டல்
இன்னவை பிறவுங் கண்ணொடு புணர்ந்த
385 புண்ணிய முடைமையிற் காண்மி னீரெனப்
பணிவி னல்வினைப் பயனுண் டாயின்
மணிமுடி மன்ன னணியுஞ் சேனையுள்
எழுமைப் பிறப்பு மெய்துகம் யாமெனக்
கழுமிய காதலொடு கைதொழு தேத்தி
390 நகர மாந்தர் பகர்வராற் பரந்தென்.
(இதுவுமது)
384 - 390: இன்னவை.........பரந்தென்
(பொழிப்புரை)
அவ்வுஞ்சைமா நகரத்து மக்கள் பலரும் அவ்விழவின்கண் யாண்டும் பரவி மேலே கூறிய காட்சிகளையும் இன்னோரன்ன பிறகாட்சிகளையும் காணாதார்க்குக் காட்டி நுமக்கெல்லாம் கண்ணொடு தொடர்புடைய புண்ணியம் இருத்தலானே இக்காட்சிகள் கிடைப்பனவாயின ; இவையிற்றைக் காணுங்கோள் ! என்று அறிவுறுத்துத் தமது ஆராமையாலே பெ.--16 "தாழ்வில்லாத நல்வினைப்பயன் நமக்குண்டாயின் இப்பிறப்பேயன்றி இனிவரும் பிறப்புக்களும் மணிமுடியையுடைய இப்பிரச்சோதன மன்னனுடைய அழகிய இவ்வுஞ்சை நகரத்திலேயே யாம் எய்தக்கடவேம் என்றுகூறிப் பெருகிய அன்போடு கை கூப்பி மன்னனையும் அந்நகரத்தையும் அப்பொய்கையினையும் தெய்வத்தையும் தொழுது வாழ்த்திக் கூறாநிற்பர் என்க".
(விளக்கம்)
நகரமாந்தர் பரந்து காண்மின் காண்மின் என்று பகர்வர் என வினைமுடிவுசெய்க. பணிவு - தாழ்வு.
40. உவந்தவை காட்டல் முற்றிற்று
.
------------------------------------------------------