| உரை |
| |
| 1. உஞ்சைக்காண்டம் |
| |
| 41. நீராட்டரவம் |
| |
பரந்த விழவினு ளுவந்தவை
காட்டி நகர
மாந்தர் பகர்வன
ரறையும் பாடிமிழ்
பனித்துறைக் கோடணை யரவமும்
|
| |
| 1 - 3: பரந்த..........அரவமும்
|
| |
| (பொழிப்புரை) இவ்வாறு நகரமாந்தர் பரவிய திருநீர் விழாவின்கண் அம்மாந்தர் தாம்தாம்
விரும்பிக்காணும் காட்சிகளை ஒருவர்க்கு ஒருவர் காட்டிக் கூறாநிற்றலாலே
ஆரவாரிக்கின்ற குளிர்ந்த அந் நீர்த்துறைகளிலே எழுந்த பெரிய ஆரவாரமும்
என்க.
|
| |
| (விளக்கம்) பகர்வனர் - கூறுபவர். கோடணையரவம் - பெரிய
முழக்கம். (நீர்விளையாட்டுக் கருவிகளும்,
போராரவாரமும்)
|