உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
           வளையார் முன்கை வையெயிற் றின்னகை
    25    இளையோர் குடைதலி னிரைகொளப் பெறாஅப்
          பைந்தாட் குருகின் மென்பறைத் தொழுதி
          தடவுச் சினைதொறுந்.....................
          மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுட்
          பார்ப்பொடு நரலும் பையு ளரவமும்
 
        24 - 29: வளை.........அரவமும்
 
(பொழிப்புரை) வளையல் ஒலிக்கின்ற முன்கையினையும், கூரிய பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய இளமையுடைய மகளிர் நீராடுதலானே இரைதேர்ந்து கொள்ளப்பெறாத பசிய கால்களையுடைய நாரையாகிய மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம், பெரிய கிளைகடோறும்.........உச்சியிற் றாம் இயற்றிய மேம்பாடுடைய கூட்டினுட் சென்று ஆங்குத் தத்தங் குஞ்சுகளோடு ஒலியாநின்ற துன்பமுடைய ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) வளையல் ஒலிக்கின்ற முன்கையினையும், கூறியயற் களையும், இனிய புன்முறுவலையும் உடைய இளமையுடைங் மகளிர் நீராடுதலானே இரைதேர்ந்து கொள்ளப்பெறாத பசிய கால்களையுடைய நாரையாகிய மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம், பெரிய கிளைகடோறும்.........உச்சியிற றாம் இயற்றிய மேம்பாடுடைய கூட்டினுட் சென்று ஆங்குத் தத்தங் குஞ்சு களோடு ஒலியாநின்ற துன்பமுடைய ஆரவாரமும் என்க.