உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
         
          இடைநீர்ப் பட்ட மடமா னம்பிணை
    40    மம்மர் நோக்க நோக்கி நையா
          நம்மில்  காலை யென்னவென் றெண்ணிப்
          புனற்சுழி நீத்த நீந்தி மற்றவை
          இனத்திடைப் புகுத்து மிளையோ ரரவமும்
 
        39 - 43: இடை..........அரவமும்
 
(பொழிப்புரை) இன்னும், வேறுசில இளமைந்தர் அவ்வெள்ளத்தே அகப்பட்டுக்கொண்ட இளமையுடைய மானினது அழகிய பிணைகளின் மயக்கமுடைய நோக்கத்தைக் கண்டு மனம் நந்து 'அந்தோ! இப்பொழுது நாம் இவ்விடத்தே இல்லையாயின் இவற்றின் நிலைமை யாதாம்?' என்று இரங்கிச் சுழித்து வருகின்ற அவ்வெள்ளத்திலே அஞ்சாமற் பாய்ந்து நீந்திச் சென்று அவற்றைப் பற்றிக் கொணர்ந்து கரைசேர்த்து அவற்றின் இனத்தோடு போகவிடா நின்றோருடைய ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) நீரிடைப்பட்ட மான் என்க. பிணை - பெண்மான், மம்மர் - மயக்கம். நம்இல்காலை - நாமில்லாதபோழ்தாயின். நீத்தம் வெள்ளம். தோணியிற் செல்லும் மகளிர் பேச்சொலி