உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
41. நீராட்டரவம் |
|
தாடியணி
தோளியர் துன்னி யேறிய 45 வடிவமை
யம்பி யடியினுள்
வானத் தாழ
றவிர்ந்து மரும்புனல்
கவைஇயின தாழ்தரும்
வலிமின் றைய
லீரெனத் திரிதர
லோவாது தீயவை
சொல்லிய மைத்துன
மைந்தரை நோக்கி மடந்தையர் 50
அச்சப் பணிமொழி யமிழ்தென மிழற்றி
நச்சுவன ராடு நல்லோ
ரரவமும்
|
|
44 - 51:
தொடி..........அரவமும்
|
|
(பொழிப்புரை) தொடியணிந்த தோளையுடைய
சிலமகளிர் சென்று ஏறிய ஓடத்தை நோக்கிய அவர் தமக்கு மைத்துன முறைமையுடைய
மைந்தர் சிலர், இந்த அழகமைந்த மரக்கலம் நீரில் ஆழுதலின்றேனும்
அதன் உள்வெளியின் அடிப்பகுதியிலே இறைத்தற்கரிய நீர் நிரம்பினது;
ஆதலாலே தையலீரே! இஃது இனி நீரிலே அமிழ்ந்து விடும்; எனவே
இதன்கண் ஏறன்மின். நீயிர் எல்லீரும் இதனைக் கரைக்கு இழுத்துச்
செல்லுங்கோள் என்று கூறி அவரைச் சுற்றித் திரிவதனை ஒழியாராக,
தீமையுடைய மொழிகளைக் கூறிய அவரை நோக்கிய
அம்மடந்தையரும் அதற்கு அஞ்சினார் போன்று பணிமொழி பல
அமிழ்தம் போன்று கூறி அத்தோணியில் ஏறாராகி அம்மைந்தரோடு தாமும் கூடி
நீராடலை விரும்பு வாராய் அவ்விடத்தேயே நீராடா நின்ற அம்மடந்தையர்
செய்யும் ஆரவார மும் என்க.
|
|
(விளக்கம்) அம்பி - தோணி.
உள்வானம் - உள்ளே அமைந்த வெளி. கவையினது ஆதலால் ஆழ்தரும் என்க.
வலிமின் - இழுமின். திரிதரல் : ஒருசொல். அஞ்சுவார் கூறும் மொழிபோன்ற
பணிமொழி என்க. அம்மைந்தர்க்கு அமிழ்தென மிழற்றி என்க.
அம்மகளிர் அம்மைந்தரோடு நீராடத் தாமும் விரும்பி அவர்
அச்சுறுத்தியதையே தலைக்கீடாகக் கொண்டு அவ்விடத்தேயே நீராடினர் என்பது
கருத்து. நல்லோராகலின் தீயவை சொன்னார்க்கு அமிழ்தென
மிழற்றினார் என்னும் நயமுணர்க.
பேதைமகளிர்
|