உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
41. நீராட்டரவம் |
|
கலங்கவின் பெற்ற கண்ணார்
களிகை நலங்கவின்
கொண்ட நனிநா
கரிகத் தம்மென்
சாய லரிவை மகளிர் 85 செம்மலஞ்
சிறுவரைச் செவிலியர்
காப்பப் பூம்பன
லாடுதோறும் புலம்பும்
புதல்வரைத் தேம்படு
கிளவியிற் றீவிய
மிழற்றிப் பாலுறு
வனமுலை பகுவாய்ச்
சேர்த்தித்
தோளுறத் தழீஇ யோலுறுப் பரவமும்
|
|
82 - 89:
கலங்கவின்..........அரவமும்
|
|
(பொழிப்புரை) அணிகலன்களுள் வைத்து அழகுமிக்க
கண்ணிறைந்தகளிகை என்னும் அணிகலத்தின் அழகோடு பெண்மைநலமும்
இயற்கையழகும் மிக்க நாகரிகமும் உடைய அழகிய மெல்லிய சாயலையுடையவராகிய
அரிவைப்பருவத்து மகளிர் தம் பெருமைமிக்க பிள்ளைகளைச் செவிலித்தாயர்
பாதுகாவா நிற்பத் தாம் மலரையுடைய நீரிலே ஆடுந்தோறும் அழா நின்ற
அப்பிள்ளைகட்கு இனிமையுடைய மொழிகளாலே கேட்டற்கினியவற்றைக் கூறித்
தமது பான்மிகுந்த அழகிய முலையை அப்பிள்ளைகளினது திறந்த வாயிலே
சேர்த்தித் தமது தோளிலே பொருந்தத் தழுவிக் கொண்டு
தாலாட்டாநின்ற ஆரவாரமும் என்க.
|
|
(விளக்கம்) கலங்களுள் வைத்துக்
கவின்கொண்ட களிகை என்க. களிகை - ஓர் அணிகலன். "திருக்கேழ்க்களிகை
செவ்வனம் சேர்த்தி" எனப் பிறாண்டும் (3 - 22: 222)கூறுவர். நலம் -
பெண்மை நலம். கவின் - இயற்கையழகென்க. அரிவைப்பருவம் தாய்மைக்குச்
சிறப்புடையது; ஆதலின் புதல்வரைப் பாலூட்டித் தாலாட்டல் ஓதினர். செம்மல்
- பெருமை. புலம்பும் - அழும். தீவிய - இனியவற்றை. ஓலுறுப்பு -
தாலாட்டல். இஃது ஐந்தாம்பருவம். (தெரிவை
மகளிர்)
|