உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
41. நீராட்டரவம் |
|
கைபுனை பாண்டியங் கட்டளை
பூட்டி வையந் தரூஉம்
வயவ ரரவமும் புகுவோ
ரரவமும் போவோ ரரவமும் 110 தொகுவோ
ரரவமுந் தொடர்ந்துகை
தழீஇ நடந்தியன்
மறுகி னகுவோ
ரரவமும் மயங்கிய
சனத்திடை மம்மர்
நெஞ்சமொடு நயந்த
காத னன்னுதன்
மகளிரைத் தேருந
ரரவமுந் திகைக்குந ரரவமும் 115
பேருநர்ப் பெறாஅப் பெரியோ ரரவமும்
|
|
107
- 115: கைபுனை............அரவமும்
|
|
(பொழிப்புரை) இனி ஒப்பனை
செய்யப்பட்ட எருதுகளைப் பூட்டி வண்டி ஓட்டிவருகின்ற மறவருடைய ஆரவாரமும்,
நீரிலே புகுவோர் செய்யும் ஆரவாரமும், நீராடிப் போவோருடைய ஆரவாரமும்,
கூட்டங்கூடுவோருடைய ஆரவாரமும், ஒருவரை யொருவர் தொடர்ந்து கைகோர்த்துத்
தாம் நடந்து செல்லாநின்ற தெருக்களிலேயே நகைப்போருடைய ஆரவாரமும்
நெருங்கிய மக்கட் கூட்டத்திடையே தம்மை விரும்பிய நல்ல நுதலையுடைய
தம்காதலி மாரைக் காணாமையாலே மயங்கிய நெஞ்சத்தோடு தேடி வருவார்
ஆரவாரமும், காண மாட்டாமையானே திகைத்துக் கூப்பிடுவோர் ஆரவாரமும்,
வழிவிலக்கித் தம்மை அழைத்துப் போவாரைப் பெறாமையாலே முதியோர்
செய்யும் ஆரவாரமும் என்க.
|
|
(விளக்கம்) பாண்டியம் -
எருது. வையம் - வண்டி. வயவர் - மறவர். நீராடப்புகுவோரும் ஆடிப்போவோரும்
என்க. நகுவோர் - நகைப்போர். சனம் - மக்கள். தேருநர் - ஆராய்வோர்.
பேருநர் - அழைத்துப்போவோர். பெரியோர் -
முதியோர்.
|