உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
உத்தரா பதத்து மொப்புமை யில்லாப் 20
பத்திரா பதியைப் பண்ணமைத்
தியற்றித்
தான்மேற் கொண்ட தன்மைய
னாதலின் நூன்மேற்
சூழ்ந்த நுனிப்பில்
வழாமைச் செருவடு
வேந்தனும் பெருநடுக்
கெய்தத்
தொகைகொண் மாடத் தகநகர் வரைப்பின்
25 நகைகொண் முறுவ னந்நாட்
டாட்டியர் புகையெரி
பொத்திய புணர்ப்புவகை யுண்மையின்
|
|
(இதுவுமது)
19
- 26:
உத்தரா..........உண்மையின்
|
|
(பொழிப்புரை) வடநாட்டகத்துந் தனக்கிணையற்ற
பத்திராபதி என்னும் பிடியானையை நன்கு ஒப்பனை செய்து நங்கோமகன்
அதன்மேல் ஏறியிருக்கின்ற பண்பினையும் உடையனாயிருக்கின்றா
னாதலினானும், இனி யாமும் அரசியனூல்களைப் பயின்று அவை கூறுகின்ற நெறிப்படி
ஆராய்ந்து துணிந்த துணிவின்கண் வழுவுத லின்றிப் போரில் வெல்லுமியல்புடைய
இப்பிரச்சோதன மன்னனும் ஞெரேலெனப் பெரிய நடுக்கத்தை அடையும்படியாகத்
தொக்குள்ள மாடமாளிகைகளையுடைய உஞ்சையினது அந்நகரின் கண் நகைத்தலை
யுடைய எயிறுகளையுடைய நம் நாட்டினின்றும் யாம் அழைத்து வந்த
நம் கள்ளமங்கையர் தீக்கொளுவும்படி யாம் செய்துள்ள சூழ்ச்சிவகையும்
நிகழ்தலுண்மையானும் என்க.
|
|
(விளக்கம்) தான் என்றது - உதயணனை. நூல் - பொருணூல். நுனிப்பு - துணிவு.
வேந்தனும் என்புழி உம்மைஉயர்வுசிறப்பு. நகர்அகம், அகநகர் என முன்பின்
மாறி நின்றது. பிறரை மயக்கித் தங்காரியத்தை முடிக்குமியல்புடைய மகளிர்
என்பான் நகைகொள் முறுவல் நம் நாட்டாட்டியர் நாட்டாட்டியர் - என்றது -
நாட்டினர் என்னும் ஒரு சொன்னீர்மைத்து. பொத்திய - பொத்தும்படி செய்த.
புணர்ப்பு - சூழ்ச்சி.
|