உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
தமரன் மாக்களைத் தருக்கி
னூறும் அமரடு
நோன்றா ணமருள
ரவ்வயின் இன்னவை
பிறவுந் தன்மனத்
தடக்கித் தானவ
ணொழிக மானவ னகரில் 70 இழுக்குடைத்
தென்னு மெண்ணமுண்
டாயினும்
வழுக்குடைத் ததனை வலித்த
னீங்குக யாவை
யாயினும் யான்றுணி
கருமம் தீய தின்மை
தெளிகவெம் பெருமகன்
|
|
(இதுவுமது)
66 - 73:
தமால்..........பெருமகன்
|
|
(பொழிப்புரை) ஆங்குள்ள நாட்டின்கண் நமக்குப் பகைவராயுள்ள மாக்கள் உளர். அவர்
ஒரோவழி பெருமானோடு எதிர்ப்பாராயின் அவர் களைக் கொன்றுகுவிக்கும்
ஆற்றலுடைய வலிய முயற்சியையுடைய நம் கேளிரும் ஆங்கே உளர்; அவர்தம்
உதவியால் அவர்களை வெல்க. இச் செய்திகளையும் பிறவற்றையும் பெருமான்
திருவுளத்தடக்கிக்கொண்டு அந் நெறியினைக் கடந்து செல்க! பிரச்சோதன
மன்னனுடைய நகரின்கண் இத்தகைய கொடுந்தொழில்களைச் செய்தல்
பழியுடைத்தாம் என்னும் நினைவு பெருமானுக்கு ஒரோவழித் தோன்றுவதுண்டாயின்
அந்நினைவு தவறுடையதே யாகும்; ஆதலால் அந்நினைவினை உறுதிப்படுத்தாமல்
மறந்தொழிதல்வேண்டும். எம்பெருமானே! அளியேன் ஆராய்ந்து தெளியும்செயல்
எத்தகையனவேயாயினும் அவற்றுள் தீயசெயல் இல்லாமையைப் பண்டைய
அநுபவத்தானும் தெளிந் தருள்க! என்க!
|
|
(விளக்கம்) தமர் அல் மாக்கள்
- பகைவர். அப்பகைவரை வெல்லும் உபாயங்கூறுவான். அவ்வயின் நோன்றாள்
நமர்உளர் என்றான். நமர் - நங்கேளிர். அவண் - அந்நெறியினை. மானவன்
- பிரச்சோதனன். இம்மன்னவன் செய்த நன்றுள்ளுங்கால் இவன்
திறத் திலே தீமை செய்தல் கூடாது என்று உதயணனுக்குத் தோன்றக் கூடும்
என்பது கருத்து. அங்ஙனம் கருதுதல் அரசிய லறமன்று
என்றவாறு. யாவையாயினும் யான்செய் கருமம் தீயதின்மையை நின்
பழைய அநுபவவாயிலாய்த் தெளிக என்றவாறு. இழுக்கு
- வசை. வழுக்கு - தவறு. வலித்தல் - உறுதிசெய்தல்.
|