உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
எவ்வெத் தானத்துங் கவ்வை
தோற்றி உதையண
குமரனும் யூகியும்
வாழ்கெனப் புதைவா
ளுரீஇப் பூசல் விளைத்தலும்
|
|
(யூகியின் மறவர் செயல்)
112
- 114:
எவ்.........விளைத்தலும்
|
|
(பொழிப்புரை) பல்வேறு இடங்களிலும் ஆரவாரத்தை
யுண்டாக்கி ''உதயணகுமரன் வாழ்க'' என்றும், ''யூகி வாழ்க'' என்றும்
வாழ்த்தி உறையினின்றும் வாட்படைகளை உருவிக்கொண்டு போர் ஆற்றா
நின்ற காலத்தே என்க.
|
|
(விளக்கம்) கவ்வை - ஆரவாரம்.
புதை - உறை. பூசல் - போர்.
|