உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
    115    மட்டணி மூதூர் மனைதொறு மரீஇய
         கட்டணி கூந்தற் கள்ள மங்கையர்
         அட்டிலு மறையும் விட்டெரி கொளுவலின
 
                (கவ்வை மங்கையர் நகரில் தீயிடுதல்)

                  115 - 117: மட்டணி..........கொளுவலின்

 
(பொழிப்புரை) சிறந்த நகரங்கட்கு அளவையாகிய அழகிய பழைய ஊராகிய உஞ்சைநகரத்தின்கண் இல்லந்தோறும், இருந்த வேடமாகக் கட்டிய பல்வேறு அணிகளையும் கூந்தலையும் உடைய கள்ளத்தன்மையுடைய மறமங்கையர் அட்டிற்சாலைகளினும், அறை களிலும் கொழுந்து விட்டெரியும்படி தீயினைக் கொளுவுதலானே என்க.
 
(விளக்கம்) மட்டு - அளவு. மூதூர் - உஞ்சைநகரம். கள்ளம் - வஞ்சம். அட்டில் - மடைப்பள்ளி. விட்டுஎரியும் எரி என்க. எரி - தீ.