உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
எட்டெனக் கூறிய திசைதிசை
தொறூஉம் ஐந்தலை
யுத்தி யரவுநா ணாக 120 மந்தர வில்லி
னந்தணன் விட்ட
தீவா யம்பு திரிதரு
நகரின் ஓவா
தெழுமடங் குட்குவரத் தோன்றி
|
|
(தீப்பட்ட ஊரின்கண் நிகழ்வன)
118 - 122:
எட்டென..........தோன்றி
|
|
(பொழிப்புரை) எட்டென்று வரையறுத்துக்
கூறப்பட்ட எல்லாத் திசைகளினும், மேருமலையை வில்லாகக் கொண்ட
பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் ஐந்து தலைகளையும்
படப்பொறிகளையும் உடைய பாம்பினை நாணாகக் கொண்டு எய்த அழல்வாயையுடைய
அம்பு சுழலாநின்ற முப்புரத்தினுங்காட்டில் ஏழுமடங்காகக் கண்டோர்க்கு
அச்சம் வரும்படி தீத்தோன்றா நிற்றலாலே என்க.
|
|
(விளக்கம்) உத்தி - படப்பொறி. அரவு - வாசுகி, மந்தரம். மலை
உட்கு - அச்சம். இப்பகுதியோடு,
'ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து நாக
நாணா மலைவில் லாக மூவகை, யாரெயில் ஓரழ
லம்பின் முளிய மாதிரம் அழல
எய்து' எனவரும் பரிபாடலை (5: 22 - 6) நினைக. தோன்றி -
தோன்ற.
|