உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            பழிப்பின்று புனைந்த பட்டணைப் படுகாற்
           கழிப்பட மாடங் காலொடு துளங்க
           விழிப்பின் மேனிதம் மின்னுயிர் விடுமென
           வேகப் புள்ளின் வெவ்விசை கேட்ட
     45    நாக மகளிரி னடுங்கு வோரும்
 
                     (இதுவுமது)
          41 - 45 :  பழிப்பின்று..........நடுங்குவோரும்
 
(பொழிப்புரை) குற்றமின்றாகப் புனையப்பட்ட பட்டாலாய அணைகளையுடைய படிக்கட்டுகளையும் ஊன்றுகால்களையுமுடைய தமது படவீடு காற்றாலே பெரிதும் அசையாநிற்பவும் இப்பேரொலியைக் கேட்டபொழுது, 'இன்னும் ஓரிமைப் பொழுதில் எமது யாக்கை எமது இனிய உயிரைவிட்டுவிடும்' என்றுகூறி விரைந்து செல்லும் கருடனுடைய வெவ்விய ஆரவாரத்தைக் கேட்ட நாககன்னியரைப் போன்று நடுங்காநிற்போரும் என்க.
 
(விளக்கம்) குற்றமின்றாகப் புனையப்பட்ட பட்டாலாய அணைகளையுடைய படிக்கட்டுகளையும் ஊன்றுகால்களையுமுடைய தமது படவீடு காற்றாலே பெரிதும் அசையாநிற்பவும் இப்பேரொலியைக் கேட்டபொழுது, 'இன்னும் ஓரிமைப் பொழுதில் எமது யாக்கை எமது இனிய உயிரைவிட்டுவிடும்' என்றுகூறி விரைந்து செல்லும் கருடனுடைய வெவ்விய ஆரவாரத்தைக் கேட்ட நாக்கன்னியரைப் போன்று நடுங்காநிற்போரும் என்க.