உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
நடுங்கு வோரு
நவையுறு
வோரும்
ஒடுங்கு வோரு மொல்கு
வோரும்
இனைய ராகத்தம் புனைநலம் புல்லென
55 நங்கையுஞ் சேயணம் மிறைவனு
நண்ணான்
என்கொ லீண்டுநம் மின்னுயிர்த்
துணையென
மங்கைய ரெல்லா மம்ம ரெய்தக்
|
|
(இதுவுமது)
52 - 57 : நடுங்கு..........எய்த
|
|
(பொழிப்புரை) அச்சத்தாலே மெய்ந்நடுங்குவோரும், மனம் வருந்துவோரும்
மகளிர்க்குள்ளே ஒடுங்கி நிற்போரும் தளர்வோரும். என இத்தகையோராகி
அம்மங்கையரெல்லாம் தமது ஒப்பனை நலம் பொலிவற்றுப் போக மேலும் அந்தோ
நம் வாசவதத்தையும் மன்னனுக்கு நெடுந்தொலைவிலுள்ளாள். மன்னவனும்
அவளிருக்கு மிடத்திற்கு வந்திலனே. இவ்விடத்தே நம் இனிய உயிர்க்குப்
பாதுகாவலாகி நம்மை உய்யக் கொள்ள வல்லது யாதோ? அறிகின்றிலேமே என்று
பெரிதும் மயங்காநிற்ப என்க.
|
|
(விளக்கம்) நலமும்
புனைவும் என்க. நங்கை - வாசவதத்தை. மம்மர் -
மயக்கம்.
|