| (விளக்கம்)  ஓதியலாளர் 
      வேந்தன் வத்தவரிறைவனை விட்டு   உழிதரல் உணர்வோர்க்கு நீதியாகத் 
      தோன்றமாட்டாது என உடலுநராய்   உழிதர என்க.    
      கணிகை - கணிகைத்தன்மை. களிறாகிய ஒருத்தல் என்க. இளைஞர்   
      யானைப்பாகர். இசையினால் யானைவெறி தணியும் என்ப. நூல் - யானை   நூல். 
      இகழ்ச்சி - பொச்சாப்பினாலுண்டான இகழ்ச்சி. மகிழ்ச்சியுமது          "இகழ்ச்சியிற் கெட்டாரை 
      உள்ளுக தாந்தம்         
      மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து"   எனவரும் திருக்குறள் (539) ஈண்டு நினையற்பாற்று.    
      உழிதரல் - சுழலுதல். ஓதியலாளர் - மன்னனைத் திருத்தலாகாமையிற்   கையறவு 
      கொண்டு சுழன்றனர் என்பது கருத்து.    நீதி - அரசநீதி. நெறி - 
      அரசியனெறி.
 
 |