உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
70 பௌவ மெல்லாம் படரு
மீண்டெனக்
கௌவை வேந்தனுங் காற்றொலி
யஞ்சி
யானையி னருஞ்சிறை வளைஇ
யதனுணம்
சேனையு முரிமையுஞ் செறிக
வந்தெனப்
பிறிதிற் றீரா நெறியின னாகக்
|
|
(அரசன்
செயல்)
70 - 74: பௌவம்..........ஆக
|
|
(பொழிப்புரை) இந்நிகழ்ச்சிகளானே
பெருந்துயர்கொண்ட பிரச்சோதன மன்னனும், சூறைக்காற்றின் ஆரவாரத்தைக்
கேட்டு ஒரோவழி, கடல்கள் அனைத்தும் இங்கே வந்துவிடுமோ? என்று
அஞ்சித்தன் யானைகளையே தமக்கு அரிய பாதுகாவலாக வளைத்து
நிறுத்தி வைத்து அவ்விடத்திற்குள் நம் படைகளும் உரிமை மகளிரும்செறிந்து
நிற்பாராக என்றுகூறி, இத்துயரத்தை அகற்றுதற்குப் பிறிதோர் நெறி
காணமாட்டாமையாய் இந்நெறி யொன்றனையே யுடையனாய்த் திகையாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) பௌவம்
- கடல். கௌவை - துன்பம். சிறை - அரண். உரிமை - அரண்மனை
மகளிர்.
|