உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
95 இன்னாக் காலை
யொன்னா
மன்னனும்
தன்னாண் டொழிற்றுணி வெண்ணு
மாயினும்
செறியக் கொள்ளுஞ் செய்கை
யோரான்
அறியக் கூறிய வன்பின்
னல்லதைத் தன்வயி
னின்றுதன் னின்னியங்
கொள்ளும் 100 என்மக
ளுள்வழி யிளையரொ
டோடிக் காவ
லின்றுதன் கடனெனக்
கூரி
மத்தவன் மான்றேர் வத்தவற் குரைமெனப்
|
|
(அரசன் செயல்) 95
- 102 : ஒன்னா,.........உரைமென
|
|
(பொழிப்புரை) பிரச்சோதனமன்னன்நம்முடைய
பகைமன்னனாகிய உதயணன் குமரன்றானும் இவ்வல்லற் பொழுதிலே தான் நமக்குச்
செய்யக்கூடிய தீமையைச் செய்யக் கருதுவதே இயல்பாயினும், நாம்
செய்த தீமையைத் தன் மனத்தின்கட் செறிய வைத்துக்கோடலைச்
சிந்தியாமல் தன் அன்புடைமையை யாம் அறியுமாறு வெளிப்படுத்துக் கூறிய
வஞ்சகமற்ற அன்புடையோனேயாகலின் நமக்குத் தீமை செய்தலைச்
சிந்தியான் ஆதலாலே நீயிர் சென்று அவ்வுதயணனைக் கண்டு வாசவதத்தை
உறையுமிடத்திற்கு நீ நின் ஏவலிளையரோடு விரைந்து சென்று நின்
வயினிருந்து நினது வீணை வித்தையை ஏற்றுக்கொள்ளும் அவட்குப்
பாதுகாவலளித்தல் நின் கடன் என்று மத்தயானையையுடைய அவ்வத்தவ மன்னனுக்கு
மிகவும் கூறுங்கோள் என்று என்க.
|
|
(விளக்கம்) நமக்கு
இடையூறு வந்துழி நம் பகைமன்னனும் இடையூறு செய்யக் கருதுதல் இயல்பே யாயினும்
உதயணன் அன்பினன் ஆதலின் நம் பகைமையைச் செறியக்கொள்ளும்
காரணத்தாற் செய்யும் தீச்செய்கையை ஓரான் அன்புடையோனாய் நன்மை செய்ய
ஓர்வதல்லது என்பது கருத்தென்க தன்வயின் - அவன் உதயணன் வயின்.
இன்னியம் வீணை. அவன் காத்தற்கு இதனானும் ஓரேதுக் கூறியபடியாம். மகள் -
வாசவதத்தை. கூரி - மிகுத்து. மத்தவன்மான் -
யானை.
|