உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
130 தவாஅக் காதலொடு
தகையாழ்
காட்டும்
உவாத்தி யாதலி னுறுதியு
மதுவெனச்
செய்கையி னறியாச் சிதைவிற்
றாகிக்
கௌவை யெரியுங் காற்றினொ
டெழுந்த
தரிமா னன்னநம் பெருமாற் சேரத்
135 திருமா நூதலியைத் தீதொடு
வாரா துதயண
குமர னொருபிடி
யேற்றிப்
போவது பொருளெனக் காவல ரிரப்பப்
|
|
(காவலர்
வேண்டுகோள்)
130 - 137 : தவாஅ..........இரப்ப
|
|
(பொழிப்புரை) மேலும்காவலாளர்எல்லாம்"உதயணன்இறை
மகட்குக் கெடாத அன்போடு கேட்போரைத் தன்பாற்றகைந்து
கொள்ளுமியல்புடைய யாழ்விச்சையினைக் கற்பித்த நல்லாசிரியனே ஆதலானும்,
இவ்வின்னற் காலத்திற்கு இதுவே உறுதியான செயலாகலானும், நஞ்செயலானே
பாதுகாத்தற்கு வழி அறியவொண்ணாதபடி எல்லாவற்றையும் சிதைப்பதாய்
ஆரவாரமுடைய தீயும் காற்றும் ஒருசேர எழாநின்றன ஆதலானும் சிங்கம்போன்ற
நம் பெருமானாகிய பிரச்சோதன மன்னன் பாற்றீதின்றிச் சென்று
சேர்தற்பொருட்டுப்பேரழகுடையது தலையுடைய "வாசதத்தையை
அவ்வுதயணகுமரனோடு ஒப்பற்ற பத்திராபதி மிசையேற்றி யாமும் அவருடன்
போதலே சிறந்த செயலாகும்" என்று, வாசவத்தையைப் பிடிமிசை யேறும்படி
வேண்டாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) தவா -
கெடாத. தகையாழ்; வினைத்தொகை. தகை - அழகுமாம். நம் செய்கையாற்
பாதுகாத்தற்கு வழியறியா என்க. சிதைவிற்று - சிதைத்தலையுடையது. கௌவை -
ஆரவாரம் எழுந்த, பல வறிசொல். பெருமான் என்றது பிரச்சோதனனை. தீதொடு
வாராது பெருமாற்சேர என்க. பொருள் -
உறுதி.
|