உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
45. படைதலைக் கொண்டது |
|
உரத்தகை யண்ணல் வரத்திற்
பெற்ற
வழிவரு நல்லியாழ் வயந்தகற்
கீத்துப்
பொற்படைப் புளகமிசைப் பொங்குஞ் சாமரை
15 நற்பிடி நடத்தொறு நடுங்குந்
தோழியைப்
பொற்கொடி மருங்குல் புல்லுவன ளருளிப்
|
|
(இதுவுமது) 12 - 16:
உரத்தகை...........அருளி்
|
|
(பொழிப்புரை) ஆற்றலும் தகுதிப்பாடும்
உடைய உதயணகுமரன் வரமாகப் பெற்றதும் தேவர்
முதலியோரிடத்தினின்றும் வழிவழியாகவந்ததுமாகிய கோடவதி என்னும் யாழ்
தன கையிலிருந்ததனைக் காஞ்சனமாலை வயந்தகன்பாற் கொடுத்துப் பின்னர்ப்
பொன்னாலியன்ற பருமத்தின்மேற் றைத்த கண்ணாடிகளின்மேலே
பொங்காநின்ற சாமரைகளையுடைய நல்லபத்திராபதி நடக்குந்தோறும்
அச்சத்தாலே மெய்ந்நடுங்காநின்ற தன் தோழியாகிய வாசவதத்தையினது
பொன் கொடி போன்ற இடையினைத் தன் திருகைகளானும் அணைத்துப்
பாதுகாவல் செய்யாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) உரம் -
ஆற்றல். அண்ணல் - உதயணகுமரன். வரத்தினாற்பெற்றதும்
தேவர்களிடத்திருந்து முனிவர்பாலும் பின்னர் உதயணன் பாலும் வருதலின்
வழிவருயாழ் என்றார் . பொற்படை - பொன்னாலாய பருமம். புளகம் - கண்ணாடி.
தோழி - வாசவதத்தை. புல்லுவனள் - முற்றெச்சம். அருளி -
அருள.
|