உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            சுடரும் வாளினர் சோர்நிண மிழுக்கி
           அடர்பூ ணகலத் தரும்படை யுற்றுக்
           குடர்க டாக்கக் குழிப்படு களிற்றிற்
           படர்கூ ரெவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும்   
 
                    (இதுவுமது)
           51 - 54: சுடரும்...........பனிப்பவும்
 
(பொழிப்புரை) ஒளிவீசும் வாளேந்திய மறவர் சிலர் தம்முடலினின்றும் சோர்ந்த நிணத்தினாலே தம் கால் வழுக்கி வீழ்தலான் பொற்றகட்டாலாய அணிகலன் அணிந்த தமது மார்பின்கண் ஆண்டுக் கிடந்த படைக்கலம் பாய்ந்து குடர்களையும் அறுத்தலான் குழியில் வீழ்ந்த களிற்றியானை போன்று எண்ணங்கள் மிகுதற்குக் காரணமான துன்பத்தோடு உடல் பதைத்து மனம் நடுங்கா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) இழுக்கி - வழுக்கி. அடர் - தகடு. படர் - துயர் நினைவு. பனித்தல் - நடுங்குதல்.